முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின் அழுத்தத்தை நீக்க உதவும் லேமினெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 7

16 May, 2024 | 05:36 PM
image

எம்மில் சிலருக்கு அவர்களுடைய தண்டுவட பகுதியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். தண்டுவடப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் வீக்க பாதிப்பு, ரத்தக் கசிவு, கட்டி, முதுகெலும்பு விரிவடைந்தோ அல்லது தளர்ச்சி அடைந்தோ நரம்புகள் மீது அழுத்துவது இதனால் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் வலி மற்றும் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளை சீராக்குவதற்காக லேமினெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என சத்திர சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய முதுகெலும்பில் முப்பத்திமூன்று எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த எலும்புகளின் உள்பகுதியில் தான் தண்டுவடம் உள்ளது. இதற்கு மேல் பகுதியில் அமைந்திருப்பது தான் லேமினா எனப்படும் பகுதி. இந்த லேமினா எனப்படும் எலும்பு பகுதியை அகற்றினால் தான் தண்டுவடத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க இயலும். இந்த லேமினாவை அகற்றி சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் லேமினெக்டோமி என குறிப்பிடப்படுகிறது.

இதன் போது சத்திர சிகிச்சை நிபுணர்கள் லேமினாவை அகற்றி அதனூடாக தண்டுவடப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானித்து அதனை சீராக்குவர். உதாரணமாக அந்தப் பகுதியில் தொற்று பாதிப்பின் காரணமாக ரத்தக் கசிவு, ரத்த நாள வீக்கம், அடைப்பு என ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதனை அகற்றவர்கள். மேலும் முதுகெலும்பில் உள்ள  டிஸ்க் எனப்படும் வட்டுகள் விலகி தண்டுவடத்தில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனையும் சீராக்குவார்கள்.

இந்தத் தருணத்தில் எம்மில் பலருக்கும் முதுகெலும்பின் சில பகுதிகளை அகற்றுவதன் மூலம் முதுகெலும்பின் உறுதித் தன்மை பாதிக்கப்படாதா? என்றும், இதனால் நாட்பட்ட பக்க விளைவு ஏதேனும் ஏற்பட்டு விடாதா? என்றும் என அச்சம் கொள்வர். இதற்கு மருத்துவர்கள் விளக்கமளிக்கையில், 'ஒன்று அல்லது இரண்டு முதுகெலும்புகளை அகற்றி அதனூடாக தண்டுவடத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதனால் எந்தவிதமான பாரிய பாதிப்பும் ஏற்படாது.

ஐந்து அல்லது ஆறு என்ற எண்ணிக்கையிலான முதுகெலும்பினை அகற்றி சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தருணம் ஏற்பட்டால் மட்டுமே அதன் போது மருத்துவர்கள் ஸ்குரு மற்றும் ராடு  எனும் உலோகத்தை பயன்படுத்தி, அதனை பொருத்தி  முதுகெலும்பின் உறுதித் தன்மையை பாதுகாத்துக் கொண்ட பிறகு சத்திர சிகிச்சையை மேற்கொள்வர்' எனக் குறிப்பிடுகிறார்கள்.

சத்திர சிகிச்சைக்கு பிறகு அப்பகுதியில் மீண்டும் அகற்றப்பட்ட எலும்பு மற்றும் தசைகளை பொருத்தி இயல்பு நிலைக்கு மாற்றி அமைப்பர்.‌ இதனால் நாட்பட்ட தண்டுவட பாதிப்பு சீராகுவதுடன் வலியும் குறையும். முழுமையான நிவாரணமும் கிடைக்கும். சத்திர சிகிச்சைக்கு முன்னரும், சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மருத்துவர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் இயன்முறை சிகிச்சையையும் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இதனிடையே தண்டுவடப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலியை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் டீ கம்ப்ரஷன் எனும் சத்திர சிகிச்சையில் ஒரு பகுதியாக லேமினெக்டோமி சத்திர சிகிச்சை  மேற்கொள்ளப்படுகிறது என்பதும், சிலருக்கு முதுமை மற்றும் பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாகவும் தண்டுவடப் பகுதியில் முதுகெலும்பு பகுதியிலுள்ள சில எலும்புகள் இயல்பான அளவைவிட கூடுதலான வளர்ச்சி அடைந்து.. பாதிப்பை ஏற்படுத்தும். இதனை சீராக்கவும் இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ரங்கநாதன்

தொகுப்பு அனுஷா.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56