எம்மில் பலரும் அரசாங்க பணிகளிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களில் பலருக்கும் தங்களுடைய உயரதிகாரிகளை பார்க்கும் போது அவர்களின் தகுதியையும், திறமையையும் தங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வர்.
அப்போது அவர்களின் தகுதி இவர்களின் தகுதியை விட குறைவாக இருந்தாலும் அல்லது திறமை குறைந்தவர்களாக இருந்தாலும் இயல்பாகவே மனதில் பொறாமை உணர்வும், சலிப்பு தன்மையும், விரக்தி பாவனையும் ஏற்படும். அத்துடன் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி இருந்தும், திறமை இருந்தும் கிடைக்கவில்லையே..! என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் எளிய பரிகாரம் ஒன்றை வழங்கி இருக்கிறார்கள்.
நாளாந்தம் அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் செம்பு எனும் தாமிர உலகத்தினாலான செம்பு ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீரை நிரப்பி, அதில் ஒரே ஒரு கோதுமையை இடுங்கள். அந்த நீரை காலையில் சூரிய உதயத்தின் போது நீங்கள் நீர் நிலைக்கு அருகில் இருந்தால் நீர் நிலையிலோ அல்லது நீர்நிலை பகுதி அருகில் இல்லை என்றால் செடியிலோ செடி, கொடி, தோட்டம் என்று எதுவும் அருகில் இல்லை என்றால் ஒரு தாம்பாள தட்டையோ அருகில் வைத்துக் கொண்டு, அதில் உங்களது கையில் இருக்கும் நீரை ஊற்றுங்கள். ஊற்றும் போது 'ஓம் சூரிய தேவாய நமஹ! ஓம் சூரிய தேவாய நமஹ! 'எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அதன் பிறகு சூரிய பகவானை நமஸ்கரித்து எம்முடைய தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப பதவி உயர்வினை வழங்கிடுக! என மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இந்தப் பிரார்த்தனையை தொடர்ச்சியாக ஒன்பது வாரங்களுக்கோ அல்லது ஒன்பது நாட்களுக்கோ செய்து கொண்டே இருந்தால் நீங்கள் எண்ணியபடி உங்கள் தகுதிக்கேற்ப பதவி உயர்வு தேடி வரும். வேறு சிலருக்கு உயரதிகாரிகளால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட நெருக்கடி மற்றும் அழுத்தங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வேறு சிலருக்கு அரசாங்க பணிகள் தொடர்பான சாதகமான விடயங்கள் மற்றும் பலன்கள் கிடைக்கும்.
மேலும் கூடுதலான பலன்களைப் பெற வேண்டும் என திட்டமிட்டால் உங்களுடைய உயரதிகாரியை ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அல்லது வேறு ஏதேனும் கிழமைகளில் உங்களுடைய இல்லத்திற்கு அதிதியாக வரவழைத்து அவருக்கு பிடித்த உணவினை சமைத்து பசியாற்றினாலும் உங்களுக்கான பதவி உயர்வு கிடைக்கும்.
இதன் சூட்சமம் என்பது உங்களுடைய ஜாதகத்தில் வலிமை குறைந்திருக்கும் சூரிய பகவானின் வலிமையை மேம்படுத்துவது தான் இந்த பரிகாரத்தின் நோக்கம்.
மேலும் இந்த எளிய பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களுக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனை குறையும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM