(துரைநாயகம் சஞ்சீவன்)
கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் அகற்றியிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மூதூர் நீதிமன்றில், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நால்வருக்கு எதிரான வழக்கானது, நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வழக்கு விசாரணைக்காக நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் எதிரிகளின் சார்பாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, இவ்வழக்கில் எதிரிகள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மூதூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கட்டளை பிறப்பித்திருக்கிறது.
தென்னிலங்கையிலே பாற்சோறு கொடுப்பது சட்ட விரோதமாகாது என்றால் எவ்வாறு வடக்கு, கிழக்கிலே கஞ்சி கொடுப்பது சட்ட விரோதமாகும் என்பது போன்ற பல கேள்விகளை வாதங்களாக நீதிமன்றில் முன்வைத்ததாகவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த நால்வரின் கைது தொடர்பில் சம்பூர் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM