'தி வாரியர்' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் திரைப்படத்தில் ராம், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், காவியா தாப்பர், பானி ஜெ, ஆலி, கெட்டப் சீனு, ஷாயாஜி ஷிண்டே, டெம்பர் வம்சி, மார்க்ராந்த் தேஷ் பாண்டே உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.
சாம் கே. நாயுடு மற்றும் கியானி ஜியநெல்லி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்ஷன் காட்சிகள் காதல் காட்சிகள். நகைச்சுவை காட்சிகள் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு பாடல்கள் என கமர்சியல் அம்சங்கள் இணைக்கப்பட்டிருப்பதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM