திருகோணமலை வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கவிருந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் 

16 May, 2024 | 03:36 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். 

முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது மக்கள் அனுபவித்த வலிகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை வெருகல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் இன்றைய தினம் (16) நடத்த திட்டமிட்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணிக்குப் பின்னர், இந்த சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்ற ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த நபர்களிடம், தடை உத்தரவு பெறப்பட்டிருப்பதாகக் கூறி தடை உத்தரவை வழங்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட பலரது பெயர்களையும் வாசித்து காண்பித்ததாகவும் தெரிய வருகின்றது.

'தடையை மீறி நிகழ்வை முன்னெடுப்பீர்களாக இருந்தால் கைது செய்யப்படுவீர்கள்' எனவும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குறைந்தது 6 மாதங்களுக்கு பிணை எடுக்க முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்படும் என அச்சுறுத்தியதாகவும் தெரியவருகிறது. 

அத்துடன், கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை தாங்கள் தடுக்கவில்லை எனவும் தற்போது அதனை தடுக்கவேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34