பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷா தான் பிரதமர் - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Published By: Digital Desk 3

16 May, 2024 | 02:08 PM
image

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு முதல் அமித்ஷா தான் பிரதமர் பதவியை ஏற்பார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவுடன். இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது,

இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்துள்ளேன்.‌

அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும். அதன் பிறகு நாட்டின் பிரதமராக அமித் ஷாவிற்கு வழி விட மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என பிரதமர் இது வரை அறிவிக்கவில்லை.

இந்தத் தேர்தலில் அமித் ஷாவுக்காக மோடி வாக்கு சேகரிக்கிறார்.

உத்தர பிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளார்.

அரசியல் அமைப்பை மாற்றி எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 220 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். ஹரியானா, தில்லி, பஞ்சாப், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு குறையும். அதனால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது.'' என்றார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 20 ஆம் திகதியன்று நடைபெறுகிறது.  இந்நிலையில் அகிலேஷ் யாதவ்வும்,  அரவிந்த் கெஜ்ரிவாலும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்திருப்பது கவனம் பெறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58