இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் சம்பந்தமான EXPO - 2024 கல்வி கண்காட்சி

16 May, 2024 | 03:48 PM
image

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழுவுடன் (HEC) இணைந்து கடந்த 8ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கல்வி கண்காட்சி 2024 சம்பந்தமான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்தது. 

கடந்த பல வருடங்களாக இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் வழங்கிவரும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழுவால் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி ஆகிய மட்டங்களில் பூரண மற்றும் பகுதியளவு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

EXPO-2024 கல்வி கண்காட்சியின் இறுதித் தினமான 15ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஏனைய இலங்கை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ், கல்வித்துறையில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளை விளங்கப்படுத்தினார். 

மேலும், இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் வருகை தந்த பாகிஸ்தானிய தூதுக்குழுவின் முயற்சிகளை உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 

முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு பாகிஸ்தானின் உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46