கிளிநொச்சியில் இரண்டு பாடசாலை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு - பலரும் பாராட்டு

Published By: Digital Desk 7

16 May, 2024 | 01:23 PM
image

தற்போது நடந்து முடிந்த க.பொ.த. சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சை நிறைவு நாள் அன்று தங்களது பாடசாலைகளில் சிரமதானம் செய்து சுத்தம் செய்ததோடு  ஞாபகார்த்தமாக மரக்கன்றுக்களையும் நாட்டி பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர்.

மேற்படி இந்த முன்மாதிரியான நிகழ்வு கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செல்வாநகர் அ.த.க பாடசாலை மற்றும் கோணாவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலும் பரீட்சை நிறைவு நாள் அன்று  தங்கள் ஆடைகளில் சாயங்களை பூசி, பாடசாலை சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்து செல்லும் நிலைமைகள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மேற்படி இரண்டு பாடசாலைகளிலும் இடம்பெற்ற இந்த முன்மாதிரியான செயற்பாடுகள் இளம் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தூண்டியிருக்கிறது.

மேற்படி இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் குறித்த மாணவர்களுடன் மேற்கொண்டுள்ள அனுகுமுறையே மாணவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக செல்வாக பாடசாலை அதிபர்  மகேந்திரராஜா அவர்களின் அன்புக்கு அப்பாடசாலை மாணவர்கள் கட்டுப்பட்டவர்களாக காணப்படுகின்றமை பெற்றோர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பிள்ளைகள் தங்களை விட அதிபரை வார்த்தைகளுக்கும் அவரின் அன்பான அனுகுமுறைக்கும் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர் எனவும் பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு

2024-06-22 17:43:06
news-image

"'விதைநெற்கள்' போன்ற வாசகர்களை பார்க்கிறேன்!" -...

2024-06-22 15:38:51
news-image

தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு கணினி...

2024-06-22 16:41:21
news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32