நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி நேற்று புதன்கிழமை (16) இரவு 7:30 மணியளவில் திடீர் மரணம் அடைந்துள்ளார்.
குறித்த பஸ் நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணிக்கும் போது நுவரெலியா - தலவாக்கலைக்கு செல்லும் வழியில் மட்டுக்கலை சந்தியில் பஸ்ஸின் டயரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பயணிகளை இறக்கிவிட்டு பஸ் பயணித்த போது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயினம் காரணமாக அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் மரணித்த சாரதி 39 வயதுடைய கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM