இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
அணித் தலைவர் விராட் கோஹ்லி உபாதையின் காரணமாக அணியிலிருந்து விலக, அணித் தலைவராக செயற்பட்ட ரஹானி சிறப்பான வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை பெற, இந்திய அணி அதன் முதலாவது இன்னங்ஸில் 332 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி அணி 137 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் யாதவ் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 106 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் கே.எல். ராஹுல் போட்டியின் இறுதிப்பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றதனூடாக தனது அரைச்சதத்தை பதிவு செய்து 51 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் அணித் தலைவர் ரஹானி 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM