தியத்தலாவை கார் பந்தய விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழப்பு!

16 May, 2024 | 10:01 AM
image

தியத்தலாவை,நரியாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவை,ஹெலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி  தியத்தலாவை,நரியாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற  “Fox Hill Super Cross 2024” கார் பந்தய போட்டியின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, போட்டியில் பங்குபற்றிய இரண்டு கார்கள்  ஒன்றுடன் ஓன்று மோதியதில் ஒரு கார் பந்தய திடலை விட்டுவிலகி அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல்...

2025-03-26 12:36:39
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:30:57
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30
news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53