யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை - தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார

Published By: Vishnu

15 May, 2024 | 10:45 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதன் மூலம் இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சில அரசியல் குழுக்கள் முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்தை பழிக்கடாவாக்க முற்படுகின்றனர். யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது இளைஞர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு, இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பாென்றின் போது தெரிவித்திருந்தது. அதேபோன்று இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப வேண்டாம். இஸ்ரேலுடனான இராஜதந்திர தொடர்புகளை நிறுத்திக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம் பலஸ்தீனர்கள் தொழில் செய்த இடங்களுக்கே நாங்கள் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக ரவூப் ஹக்கீம் தெரிவிக்கிறார். நாங்கள் அணிசேரா நாடு. வேறு நாடுகளின் அரசியல் பிரச்சினைகளுக்கு நாங்கள் உத்தரவிடுவது பிழையாகும். அந்த இரண்டு நாடுகளும் எமக்கு மிகவும் நெருக்கமான நாடுகள். மனிதாபின ரீதியில் நாங்கள் பலஸ்தீனுக்கு உதவி செய்கிறோம். காஸாவில் இருக்கும் பிள்ளைகளுக்கு நன்கொடை வழங்க தனியான நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். சர்வதேச ரீதியில் பேசவேண்டிய இடங்களில் நாங்கள் பேசி இருக்கிறோம்.

அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் ஆர்ப்பாட்டம் செய்வதால் யுத்தத்தை நிறுத்த முடியாது. நாங்கள் 30 வருடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு. நாங்கள் யுத்தத்துக்கு எதிர்ப்பு. என்றாலும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் குறுகிய அரசியல் நோக்கில் எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படுகின்றன. எமது பின் புறத்தை சொறிந்துகொள்ள நகம் இல்லாத நாங்கள் வேறு இரண்டு நாடுகளின் யுத்தத்தில் தலையிட்டு என்ன செய்ய முடியும். இந்த பிச்சைக்கார அரசியல் வாதிகளின்  செயல், இஸ்ரேலில் எமக்கு தொழில் வாய்ப்புக்களை இல்லமலாக்கும் நடவடிக்கையாகும்.

ஆனால்  40ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை அதிக சம்பளத்துக்கு  இஸ்ரேலுக்கு  தொழிலுக்காக அனுப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் இளைஞர்களை சிறந்த தொழில் முயற்சியாளர்களாக மாற்ற முடியும். ஆனால் இளைஞர்கள் தொழில் கேட்டு  தனக்கு பின்னால் வருவதையே சஜித் பிரேமதாச விரும்புகிறார். நான் சஜித் பிரேமதாசவுடன் இருந்தமை தொடர்பில் தற்போது வருத்தப்படுகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09