தகுதியுடைய  2 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் - பாராளுமன்ற வழிவகைகள் குழுவில் சுட்டிக்காட்டல்

Published By: Vishnu

15 May, 2024 | 08:46 PM
image

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இம்மாதம் மாத்திரம் (மே) 966,994 பயனாளர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் இருப்பதாக நலன்புரி சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (14) பாராளுமன்ற குழு அறையில் கூடியது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம்  சுமார் பத்து இலட்சம்  குடும்பங்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன்,மிகவும் வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும்,653,047 குடும்பங்களும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேன்முறையீடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு  அவதானம் செலுத்தியுள்ளது.இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையைக் குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கையையும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காகக் கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார்.

உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையின் தகவல்கள் அடங்கிய அறிக்கையைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் வலியுறுத்தினார். முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன்,சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு சீரற்ற வானிலை...

2024-05-19 20:42:04
news-image

பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது...

2024-05-19 19:19:35
news-image

கொழும்பு துறைமுக நகரில் தீ விபத்து!

2024-05-19 19:01:01
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் விவாதத்துக்கான திகதி...

2024-05-19 18:11:09
news-image

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்தோனேசிய எரிசக்தி...

2024-05-19 17:55:20
news-image

மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில்...

2024-05-19 17:43:37
news-image

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு...

2024-05-19 17:27:58
news-image

இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-05-19 16:57:11
news-image

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்ற...

2024-05-19 16:50:39
news-image

மலையகத்திலும் வாழும் கலை அமைப்பின் செயற்பாட்டை...

2024-05-19 16:03:00
news-image

கடும் மழையால் புத்தளம் பிரதேச தாழ்நிலப்...

2024-05-19 16:41:02
news-image

மன்னார் - பேசாலை காட்டுப் பகுதியில்...

2024-05-19 17:24:26