(நெவில் அன்தனி)
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய நாடுகளின் லீக் கரப்பந்தாட்டத்தின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கை, அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றது.
கிர்கிஸ்தானிடமும் பாகிஸ்தானிடமும் தோல்வி அடைந்த இலங்கை அதன் பின்னர் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்டதுடன் இன்று புதன்கிழமை (15) சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ஈரானுடான போட்டியிலும் வெற்றிபெற்றது.
ஈரானுக்கு எதிரான இன்றைய போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை 3 நேர் செட்களில் வெற்றிபெற்றது.
முதலாவது செட்டில் ஈரானிடம் இருந்து சிறு சவாலை எதிர்கொண்ட இலங்கை 25 - 22 புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
இரண்டாவது செட்டில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இலங்கை 25 - 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 3ஆவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய இலங்கை 25 - 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் 3 நேர் செட்களில் (25 - 19, 25 - 20, 25 - 14) இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
எவ்வாறாயினும் தனது முதல் இரண்டு போட்டிகளில் கிர்கிஸ்தானிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை தோல்விகளைத் தழுவியிருந்தது.
ஆரம்பப் போட்டியில் கிர்கிஸ்தானுக்கு கடும் சவால் விடுத்து விளையாடிய இலங்கை 2 - 3 செட்கள் கணக்கில் தோல்வி அடைந்தது.
முதல் செட்டில் கிர்கிஸ்தான் 27 - 25 என வெற்றிபெற்றது.
ஆனால், அடுத்த 2 செட்களில் 25 - 17, 25 - 18 என இலங்கை வெற்றிபெற்று உற்சாகம் அடைந்தது.
ஆனால், அடுத்த இரண்டு செட்களில் தவறுகளை இழைத்த இலங்கை 20 - 25 எனவும் 10 - 15 எனவும் அந்த செட்களை நழுவ விட்டு போட்டியில் 2 - 3 என்ற செட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை சந்தித்த இலங்கை 3 நேர் செட்களில் தோல்வி அடைந்தது.
அப் போட்டியில் 25 - 21, 25 - 23, 25 - 18 என்ற புள்ளிகள் அடிப்படையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இலங்கை தனது கடைசிப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை நாளை வியாழக்கிழமை (16) எதிர்த்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM