மக்களிள் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால் உடனடியாக மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும் ; எதிர்க்கட்சித் தலைவர்

15 May, 2024 | 05:35 PM
image

மத்திய வங்கி தன் விருப்பத்தின் பேரில் ஊதியத்தை அதிகரிக்கும் போது, அரசாங்கம் அதை தன் விருப்பப்படி அங்கீகரிக்கிறது. இது நியாயமற்ற செயல். இதனால் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேலைநிறுத்தங்களால் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதால் இப்பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். சரியான குழுவைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 186 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், ஹொரோவ்பதான, கஹடகஸ்திகிலிய, முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 15 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் உள்ள சிலர் வாக்குறுதிகளை நம்பாவிட்டாலும், வாக்குறுதி விடயத்தில் தன் மீது அவநம்பிக்கை கொள்ள எந்த காரணமும் இல்லை என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், வேறு எந்தவொரு எதிர்க்கட்சி குறித்தும் மக்களுக்கு நம்பிக்கையில்லாது போனாலும், தானும் தனது குழுவினரும் இதில் அடங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார். 

புதியதொரு பயணம், புதியதொரு திட்டம், புதியதொரு செயல்முறை ஊடாக சொல்வதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம். இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் உயர்கல்வி வீழ்ச்சியடைந்து வரும் தருணத்தில் இலவசக் கல்விக்கு மரண அடி விழுந்து வருகிறது. இலவசக் கல்வித்துறையில் பிரச்சினைகள் இருந்தாலும் தனியார் கல்வித்துறையில் பிரச்சினைகள் நிலவவில்லை. தற்போது கல்வித்துறையில் வேலைநிறுத்த அலை வீசுகிறது. 

கல்வித்துறையில் எங்கும் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க முடியாமல் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு...

2024-05-24 22:31:14
news-image

மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117...

2024-05-24 22:10:06
news-image

பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில்...

2024-05-24 20:48:18
news-image

கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது

2024-05-24 19:34:10
news-image

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம்...

2024-05-24 18:51:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 4 பெண்கள் உட்பட...

2024-05-24 19:08:03
news-image

சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம்...

2024-05-24 18:09:43
news-image

வாகரை மாங்கேணி கடலில் நீராடிய ஒருவர்...

2024-05-24 19:09:42
news-image

இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு...

2024-05-24 17:47:03
news-image

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள்...

2024-05-24 19:08:54
news-image

நுவரெலியாவில் புதிய தேநீர் திருவிழா 2024

2024-05-24 17:42:31
news-image

திடீரென உடைந்து வீழ்ந்த திவுலபிட்டிய வெசாக்...

2024-05-24 17:14:25