உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பதினெட்டாவது இந்திய மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தற்போது வரை நான்கு கட்டங்கள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டத் தேர்தல் மே இருபதாம் திகதியன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரு முறை போட்டியிட்டு வென்ற வாரணாசி தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். ஜூன் ஒன்றாம் திகதியன்று இங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அங்கு வருகை தந்தார். அவரை பாரதிய ஜனதா கட்சியினரும், உத்தரபிரதேச மாநில முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியையும், காலபைரவர் ஆலயத்திற்கு சென்று கால பைரவரையும் வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பின் வாரணாசி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே .வாசன் உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சித் தலைவர்கள் வாரணாசி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜலிங்கத்திடம் தனது வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்தார்.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்தர மோடி 5. 81 லட்சம் வாக்குகளை பெற்றார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 6.74 லட்சம் வாக்குகளை பெற்றார்.
இந்த முறை இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை அவர் பெறுவாரா? இல்லையா? என்பது ஜூன் நான்காம் திகதியன்று முடிவுகள் வெளியான பிறகு தான் உறுதியாக தெரியவரும்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அஜய் ராய் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஏ. ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM