எம்மில் பலரும் தோல்வி அடையும்போது 'என் நேரம் சரியில்லை. என் ஜாதகமும் சரியில்லை' என புலம்புவதை கேட்டிருப்போம். வேறு சிலர் தங்களது தொடர் தோல்விகளுக்கு தங்களின் அனுபவமின்மை அல்லது தங்களது கடின உழைப்பின்மையே காரணம் என புரிந்து கொண்டு, அதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வெற்றி பெறுவதற்கான பாதையை உருவாக்கிக் கொள்வர். வேறு சிலர் ஜாதகத்தை குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து திசா நாதனின் வலிமை, புத்தி நாதனின் வலிமை, அந்தரம் நடத்தும் கிரகத்தின் வலிமை, ஜாதகத்தில் கிரக வலிமை திதி சூனியம் பெற்ற ராசிகள், இந்து லக்னம் என பல்வேறு நுட்பமான விடயங்கள் குறித்து கேட்டு அறிந்து அதற்கேற்ற பரிகாரத்தை செய்து கொண்டு புத்திசாலித்தனமாக முயற்சித்து வாழ்க்கையில் வெற்றி காண்பர்.
சிலர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ தங்களது ஜாதகத்தை குடும்ப ஜோதிடரிடம் காண்பிப்பர். அவர்கள் சில தருணங்களில் ஜாதகத்தை ஆய்வு செய்யாமல் 15 நாள் கழித்து வாருங்கள் அல்லது ஒரு மாதம் கழித்து வாருங்கள் அல்லது மூன்று மாதம் கழித்து வாருங்கள் என பதிலளிப்பர். இதன் பின்னணியில் ஒரு சூட்சமம் அடங்கி இருக்கிறது.
அந்த காலகட்டத்தில் உங்களது ஜாதகம் வலிமை குறைந்து வீரியம் இழந்து காணப்படும். இத்தகைய தருணங்களில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நவகிரகங்களுக்குரிய பீஜ மந்திரத்தை உங்களுடைய ஜாதகத்தின் ராசி கட்டத்திற்கு ஏற்ப எழுதி அதனை வலிமைப்படுத்தினால் உங்களது ஜாதகம் நவக்கிரகங்களின் பீஜ மந்திரத்தால் வலிமை பெறும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உடனே எம்மில் சிலர் பீஜ மந்திரத்தை எப்படி பாவிப்பது? எனக் கேட்பர். இது மிகவும் எளிதானது. முதலில் உங்களது ராசி கட்டத்தை வரைந்து கொள்ளுங்கள். உங்களது ராசி கட்டத்தில் நவகிரகங்கள் எந்தெந்த வீடுகளில் இருக்கிறார்களோ அந்த வீடுகளில் அதாவது அந்த கட்டங்களில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பீஜ மந்திரத்தை எழுதுங்கள்.
சூரியன் - க்ரீம்
சந்திரன் - ரீம்
புதன் - ஸ்ரீம்
குரு - ஔம்
சுக்கிரன் - க்லீம்
செவ்வாய் - ஹ்ரீம்
சனிபகவான் - ஐம்
ராகு - கௌம்
கேது- சௌம்
என ஒவ்வொரு நவகிரகத்திற்கும் பீஜ மந்திரம் உண்டு. இதை உங்களது ராசி கட்டத்தில் எழுதி அந்த ஜாதகத்தை உங்களுடைய பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் தொடர்ச்சியாக வணங்கி வர வேண்டும்.
பீஜ மந்திரத்தை ஒவ்வொரு நாளும் உச்சரிக்க வேண்டும். 108 முறை உச்சரித்தாலும் சுப பலன்கள் விரைவாகட்டும். உடனே எம்மில் சிலர் பீஜ மந்திரத்தை எந்த வரிசையில் உச்சரிப்பது? எனக் கேட்பர். லக்னம் தான் உங்களது உயிர். அதனால் உங்களுடைய லக்னம் எந்த ராசி கட்டத்தில் இடம்பெற்றிருக்கிறதோ அதிலிருந்து பீஜ மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்குங்கள்.
உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகத்தில் மேஷ வீட்டில் செவ்வாய் இருந்தால் மேச வீட்டின் கட்டத்திற்குள் செவ்வாய் பகவானுக்குரிய பீஜ மந்திரமான 'ஹ்ரீம்' என எழுத வேண்டும். உங்களது லக்னம் மேஷமாக இருந்தால் நீங்கள் நவகிரகத்திற்கான பிஜ மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கும் போது 'ஹ்ரீம்' என தொடங்க வேண்டும். இதனை பின்பற்றுவதற்கு குழப்பமாக இருந்தால் பின்வரும் கிழமை முறையை கடைப்பிடிக்கலாம்.
திங்கட்கிழமை என்பது சந்திர பகவானை குறிக்கும் என்பதால் சந்திர பகவானுக்குரிய பீஜ மந்திரத்தை காலையில் எழுந்தவுடன் 108 முறை உச்சரிக்கலாம்.
செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானைக் குறிக்கும் என்பதால் செவ்வாய் பகவானுக்குரிய பீஜ மந்திரத்தை காலையில் எழுந்தவுடன் 108 முறை உச்சரிக்கலாம்.
இதே போல் ஒவ்வொரு கிழமையொன்றும் அந்தக் கிழமைக்குரிய நவகிரகத்தை அதற்குரிய பீஜ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனால் வலு குறைந்திருக்கும் உங்களது ஜாதகம் சூட்சமமான வலிமையை பெற்று உங்களுக்கான சுப பலன்களை வழங்க தொடங்குவதை அனுபவத்தில் காண்பீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM