தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திர நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பாக்குறா தாக்குறா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, எம். எஸ். பாஸ்கர், விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். திருமலை தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'பாக்குறா தாக்குறா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் இசையமைப்பாளரும், பாடகருமான நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசையாகவும், தாள லயத்துடனும், காதல் உணர்வு கலந்த பாடல் வரிகளுடனும் இப்பாடல் உருவாகி இருப்பதால் இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM