சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை பேசும் 'கன்னி'

Published By: Digital Desk 7

15 May, 2024 | 05:09 PM
image

நடிகை அஸ்வினி சந்திரசேகர் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கன்னி' எனும் திரைப்படம் மலைவாழ் மக்களிடையே இன்றும் நடைமுறையில் இருக்கும் சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை விவரிப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கன்னி' எனும் திரைப்படத்தில் அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செபாஸ்டியன் சதீஷ் இசையமைத்திருக்கிறார். மலைவாழ் மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் லைஃப் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். செல்வராஜ் தயாரித்திருக்கிறார். 

மே 17ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை வெளியீட்டிற்கு முன் அறிமுகப்படுத்தும் விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

 '' தமிழக நகரான ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை எனும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் ஒன்றின் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  ஜவ்வாது மலையில் இன்றும் சித்த மருத்துவம் மேற்கொள்ளும் சித்த வைத்தியர்கள் இருக்கிறார்கள். நவீன மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளி ஒருவரை இம்மலையில் வாழும் சித்த வைத்திய பெண்மணி ஒருவர் காப்பாற்றுகிறார்.

இந்நிலையில் சித்த மருத்துவ ரகசியத்தை கைப்பற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அந்த கும்பலின் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. இந்தத் திரைப்படத்தில் கதை களத்திற்காக கதாபாத்திரங்கள் தமிழ், வட்டார வழக்கு, கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பேசுகிறார்கள். இது கதையின் நம்பகத்தன்மைக்கு பக்கபலமாக இருக்கும் என நம்புகிறேன்.‌சித்த வைத்தியத்தின் தனித்துவத்தை விவரிப்பதற்காகவே இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் 'கன்னி' தயாராகி இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பி டி சார் - விமர்சனம்

2024-05-24 18:05:37
news-image

பொபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்'...

2024-05-24 17:55:21
news-image

விதார்த் நடிக்கும் 'அஞ்சாமை' படத்தின் ஃபர்ஸ்ட்...

2024-05-24 17:51:41
news-image

ஷாருக்கான் சிகிச்சைக்காக கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

2024-05-23 22:55:55
news-image

சாமானியன் - விமர்சனம்

2024-05-23 16:34:31
news-image

'என் தாய் மண் மேல் ஆணை...

2024-05-23 16:17:03
news-image

மாற்றுத்திறனாளியான பிள்ளையின் வாழ்வியலை பேசும் 'பிள்ளையார்...

2024-05-23 15:22:38
news-image

'கருடன் திரைப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி...

2024-05-22 14:29:12
news-image

'புரட்சித் தமிழன்' சத்யராஜ் கௌரவ வேடத்தில்...

2024-05-21 17:47:04
news-image

யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படத்தின்...

2024-05-21 17:46:33
news-image

மே இறுதியில் வெளியாகும் 'உப்பு புளி...

2024-05-20 18:38:34
news-image

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா...

2024-05-20 17:27:22