(எம்.எம்.சில்வெஸ்டர்)
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அணித்தலைவர் என்ற சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் பாபர் அசாம் படைத்தார்.
அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இவ்விரண்டு அணிகளுக்கிடையில் கடந்த ஞாயிறன்று (12) நடைபெற்ற 2ஆவது போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அணித்தலைவர் என்ற உகண்டா கிரிக்கெட் அணித்தலைவர் பிரையன் மசாபாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்தார்.
பிரையன் மசாபா 56 போட்டிகளுக்கு அணித்தலைவராக செயற்பட்டு, 44 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு வழிநடத்தியிருந்தார். இந்த சாதனையை பாபர் அசாம் 78 போட்டிகளுக்கு அணித்தலைவராக செயற்பட்டு 45 போட்டிகளில் வெற்றியீட்டி அதிக வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அணித்தலைவர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.
மேலும், சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் பாகிஸ்தான் அணிக்காக 78 போட்டிகளில் அணித்தலைவராக செயற்பட்டுள்ள பாபர் அசாம், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகளுக்கு அணித்தலைவராக செயற்பட்டவர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 76 போட்டிகளுக்கு அணித்தலைவராக செயற்பட்டிருந்தமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM