பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய மேலும் 4 பேர் கைது

15 May, 2024 | 05:16 PM
image

பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் மேலும் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாத்தறை மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 1,004 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு...

2024-05-24 22:31:14
news-image

மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117...

2024-05-24 22:10:06
news-image

பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில்...

2024-05-24 20:48:18
news-image

கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது

2024-05-24 19:34:10
news-image

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம்...

2024-05-24 18:51:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 4 பெண்கள் உட்பட...

2024-05-24 19:08:03
news-image

சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம்...

2024-05-24 18:09:43
news-image

வாகரை மாங்கேணி கடலில் நீராடிய ஒருவர்...

2024-05-24 19:09:42
news-image

இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு...

2024-05-24 17:47:03
news-image

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள்...

2024-05-24 19:08:54
news-image

நுவரெலியாவில் புதிய தேநீர் திருவிழா 2024

2024-05-24 17:42:31
news-image

திடீரென உடைந்து வீழ்ந்த திவுலபிட்டிய வெசாக்...

2024-05-24 17:14:25