மாத்தறை தொழிலாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

ஹெக்மன - துடுவ சந்தியில் வைத்து வர்த்தகர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தொழிலாளர்களுக்கு முறையாக ஊழியர் சேமலாப நிதியை வழங்காததாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டில் இருந்து விலக்கிவிடுவதாக சூறியே குறித்த அதிகாரி இலஞ்சம் பெற்றுள்ளார்.