யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ? - வெளியான அதிர்ச்சி தகவல்

Published By: Digital Desk 7

15 May, 2024 | 02:39 PM
image

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும், அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில், கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் , திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார்.

அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக கடமையாற்றி வருகிறார். மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

அதேவேளை கணவன் - மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர் ;...

2024-11-08 15:50:11
news-image

3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து...

2024-11-08 22:49:30
news-image

சட்டவிரோத மரக்களஞ்சியசாலை வைத்திருந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான...

2024-11-08 21:24:25
news-image

மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச...

2024-11-08 21:19:51
news-image

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக...

2024-11-08 20:27:34
news-image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும்...

2024-11-08 20:18:10
news-image

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள்...

2024-11-08 20:10:49
news-image

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர்...

2024-11-08 19:31:51
news-image

தொழிற்சங்கங்களையும் ஊடகங்களையும் அடக்கி மக்களின் குரலை...

2024-11-08 17:23:14
news-image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை...

2024-11-08 18:42:46
news-image

அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

2024-11-08 19:23:54
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து...

2024-11-08 16:47:02