பிரேசிலில் அடை மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைவதால் மேலும் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் வெள்ளத்தால் 149 பேர் உயிரிழந்துள்ளதோடு, 124 பேர் காணாமல் போயுள்ளார்கள்.
வெள்ளத்தால் சுமார் 155,000 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் நெருக்கடியால் 21 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகரான போர்டோ அலெக்ரேவில் உள்ள குவாபா ஆற்றின் நீர் மட்டம் 8 அடி வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுத்துவருதாக பிரேசிலின் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் திங்களன்று தெரிவித்ததுள்ளார்.
பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தேசிய சிவில் பாதுகாப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளை புனரமைத்தல் செவ்வாய்க்கிழமை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கும் என்று அறிவித்தார்.
"இன்று முதல், பாடசாலைகள், நாளாந்த பராமரிப்பு நிலையங்கள், சுகாதார பிரிவுகள், வைத்தியசாலைகளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைகளை மேயர்களும் மாநில அரசாங்கமும் பதிவு செய்யலாம். பதிவு செய்தால் போதும், உடனடியாக மக்களுக்கு சேவைகள் கிடைக்கும்" என ஜனாதிபதி சில்வா நேரடி ஒளிபரப்பின் போது தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடினமான நேரத்தில் அமெரிக்கா பிரேசிலுக்கு ஆதரவு கொடுக்கும் என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிரேசிலின் வரலாறு காணாத மழைப்பொழிவுக்குபசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிக்கும் எல் நினோதான் காரணம் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM