கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி

15 May, 2024 | 03:02 PM
image

அலுபோமுல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பிங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (14) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பண்டாரகமையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33
news-image

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு 

2026-04-22 17:25:26
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ்...

2026-04-22 17:26:38
news-image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19...

2026-04-22 17:09:55