கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை குறைக்க 7 விசேட திட்டங்கள் - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 7

15 May, 2024 | 04:50 PM
image

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை துரிதப்படுத்துமாறு காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். முன்னுரிமைகளை இனங்கண்டு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மேலும் ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 07 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை குறைக்கும் திட்டம் 03 கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

கொழும்பிற்கு வெளியே நீர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் நகர  நிலத்தை அலங்கரிக்கும் திட்டம், பலன்கஸ்துடுவ நீரேற்று நிலைய திட்டம், மழைநீர் நீரேற்று நிலைய வெள்ள வாயில்கள் உட்பட வெள்ள கட்டுப்பாட்டு வசதி செயற்பாடு மற்றும் பராமரிப்பு திட்டம், ஒருங்கிணைந்த வெள்ள முகாமைத்துவ அமைப்பு மற்றும் நிகழ்நேர கட்டுப்பாட்டு தரவு மைய நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு திட்டம், பிலியந்தலை முதன்மை அபிவிருத்தி திட்டத்தின் நீர் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்றத்தின் மேல் நீர் பிடிப்புப் பகுதியான பத்தரமுல்ல நீர் பிடிப்புப் பகுதியின் நீர் போக்குவரத்து மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டம் என்பன அந்த 7 திட்டங்களாகும்.

இவற்றில் 02 வேலைத்திட்டங்கள் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலியந்தலை முதன்மை அபிவிருத்தி திட்டத்தில் நீர் போக்குவரத்து மேம்பாட்டு திட்டம் மற்றும் பாராளுமன்றத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியான பத்தரமுல்லை நீர்நிலையில் நீர் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 203 மில்லியன் ரூபா. மேலும், பேலியகொடையில் தற்போதுள்ள நீரேற்று நிலையத்தை மேம்படுத்தும் திட்டமும் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் மாதிவெல தெற்கு மாற்றுப்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. களு பாலத்தில் முன்மொழியப்பட்ட Gate Mounted Pumps களை நிறுவுதல், நிர்மாண வேலைத் திட்டம் 2021 முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முறையே 10 இலட்சம் ரூபாய் மற்றும் 90 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுடன் கொழும்பு கால்வாய்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பும் வெள்ளத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜப்பபான்  கோர்ஸ் புல், சல்வீனியா, ஆக்கிரமிப்பு செடிகள் என்பதால் கால்வாய்களில் வளர்ந்துள்ள இச்செடிகளை அகற்றி, நகர  பொலிதீன் மற்றும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, மனித உழைப்பு மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி கால்வாய்களை சுத்தம் செய்கின்றனர்.

இப்பணிகள் ஆண்டுதோறும் செய்யப்பட வேண்டியுள்ளதால், இத்திட்டம் ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் கூறுகிறது.

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் கொழும்பின் பிரதான கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை பராமரித்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற தொழிலையும் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, இந்த நிறுவனம் கொழும்பின் பிரதான கால்வாய்களின் 44 கிலோமீற்றர்களையும் பராமரிக்கிறது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 295 மில்லியன் ரூபா. இதன்படி, களுஓயா துரோணி கால்வாய்களை பராமரித்தல், கால்வாயை அண்டிய கால்வாய் கரைகளை பாதுகாத்தல், புதிய கரைகளை அமைத்தல், லுனாவ கால்வாய் பராமரிப்பு, லுனாவ களப்பு, பழைய ஒல்லாந்து கால்வாய் மற்றும் அதனுடன் இணைந்த நீர் பராமரிப்பு ஆகியன இதன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் சிறுவன் நீரில்...

2025-04-25 01:52:13
news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51