சோண்டர்ஸ் கழ­கத்­திற்கு எதி­ராக சிட்டி லீக் மைதா­னத்தில் கடந்த ஞாயிறன்று நடை­பெற்ற சிட்டி லீக் தலைவர் கிண்ண குழு 'பி'யிற்­கான கடைசி லீக் கால்பந்து போட்­டியில் 3 –0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்ற கொழும்பு எவ். சி. அரை­யி­று­திக்கு நுழைந்­தது.

போட்­டியின் 21ஆவது நிமி­டத்தில் சோண்டர்ஸ் வீரர் ஒருவர் தனது பெனல்டி எல்­லையில் விதியை மீறி­யதால் கொழும்பு எவ். சி.க்கு பெனல்டி வாய்ப்­பொன்று கிடைத்­தது.

இந்தப் பெனல்­டியை யாப்போ இலக்கு தவ­றாமல் கோலினுள் புகுத்­தினார்.

போட்­டியின் 80ஆவது நிமி­டத்தில் ஸர்வான் ஜொஹாரும் 6 நிமி­டங்கள் கழித்து தனுஷ்க மது­ஷங்க­வும் கோல்­களைப் போட கொழும்பு எவ். சி. 3 –0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது. 

இப் போட்டி முடிவு­களின் பிர­காரம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது அரை­யி­று­தியில் றினோனை, கொழும்பு எவ். சி.யும் ஞாயி­றன்று நடை­பெற­வுள்ள இரண்­டா­வது அரை­யி­று­தியில் மொர­கொஸ்­முல்லை கழ­கத்தை ஜாவாலேனும் சந்­திக்­க­வுள்­ளன. இந்த போட்டிகள் சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளன.