பாகிஸ்தான், இலங்கையில் இணைய தணிக்கை

15 May, 2024 | 11:30 AM
image

பிரிட்னி மார்டில்

தெற்காசியா இணைய தணிக்கையின் சிக்கலான சவாலுடன் தொடர்ந்தும் போராடி வருகிறது. நிகழ்நிலை உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இணைப்பைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, டிஜிட்டல் சுதந்திரத்தைச் சுற்றியுள்ள கரிசனங்கள் அதிகரித்துள்ளன.

இந்த ஒப்பீட்டு ரீதியான பகுப்பாய்வு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் உள்ள இணைய தணிக்கையின் நுணுக்கமான பரப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுவதுடன், முக்கிய நிகழ்வுகள், அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் இரு நாடுகளின் டிஜிட்டல் தளங்களில் உள்ள தொலைநோக்கு விளைவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறது.

அரசியல் சூழல் மற்றும் எதிர்ப்புகளை அடக்குதல்

சமீப காலங்களில், உலகளாவிய பரப்பு இணைய சுதந்திரம் குறைவதற்கான ஒரு போக்கைக் கண்டுள்ளதுடன்,குறிப்பாக இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நிகழ்வுகளில் சுட்டிக்காட்டப்படுவதுடன், அங்கு எதிர்ப்புகளை அடக்குவது இணைய தணிக்கை விதிப்புடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தவறாகக் கையாண்டமையால் தூண்டப்பட்ட மார்ச் 2022இல் வெடித்த போராட்டங்களின்போது, இலங்கை குறிப்பிடத்தக்க இணைய சுதந்திரத்தை எதிர்கொண்டது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், அரசியல் சீர்திருத்தங்களுக்காக பரப்புரை ஆற்றிய அரகலய இயக்கத்தை பல்வேறு சமூக ஊடக தளங்களில் 16 மணிநேர தடைகளை விதித்து கட்டுப்படுத்தியது.

இந்த அடக்குமுறையானது நிகழ்நிலை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கைது செய்வதை உள்ளடக்கியதுடன், தவறான தகவல் என்று அரசாங்கம் கருதுவனவற்றை பரப்புவதை கட்டுப்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட புதிய குற்றவியல் தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதேபோல், பாகிஸ்தான் 2012ஆம் ஆண்டு முதல் தேசிய அளவிலான URL தகவல் வடிகட்டல் முறைமையை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்பித்த முயற்சிகளின்போது, இணைய தணிக்கையில் சிக்கிய வரலாற்றை கொண்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அந்நாடு முக்கிய சமூக ஊடக தளங்களில் இடைவிடாத தடைகளை அனுபவித்ததுடன் பெரும்பாலும் அவதூறான உள்ளடக்கம் மற்றும் அரசியல் எதிர்ப்புகள் தொடர்பான கரிசனங்களால் உந்தப்பட்டது.

குறிப்பாக YouTube கட்டுப்பாடுகளின் மையப்புள்ளியாக மாற்றமடைந்தது. இணைய உட்கட்டமைப்பு மீதான அரசாங்கத்தின் உறுதியான கட்டுப்பாடு மற்றும் இணையதள தணிக்கை மீதான சட்டப் போராட்டங்களில் அதன் ஈடுபாடு ஆகியவை அரசியல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் சிக்கலான மேற்பொருந்துகையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிகழ்வுகள் பரந்த உலகளாவிய சவாலை சுட்டிக்காட்டுவதுடன், அங்கு அரசாங்கங்கள் அரசியல் அமைதியின்மை மற்றும் எதிர்ப்புக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கான வழிமுறையாக இணைய சுதந்திரத்தைக் குறைப்பதை அதிகளவில் நாடுகின்றன. நிகழ்நிலை தளங்களை ஒடுக்குதல், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கைது செய்தல் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அனைத்தும் அரசியல் கட்டுப்பாட்டுக்கான ஒரு கருவியாக இணைய தணிக்கையை பயன்படுத்துவது வளர்ந்துவரும் போக்கை எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் கதைகளை வடிவமைப்பதிலும், பொதுக் கருத்தைத் திரட்டுவதிலும் டிஜிட்டல் தளம் தொடர்ந்து முக்கிய பங்காற்றுவதால், அரசாங்க அதிகாரத்துக்கும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கும் இடையிலான நுட்பமான சமநிலை உலக அரங்கில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

இலங்கையில் இணைய தணிக்கைக்கான ஒழுங்குபடுத்தல் பரப்பு மற்றும் சட்டக் கட்டமைப்பு

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் (ICCPR) கையெழுத்திட்டுள்ள இலங்கை, கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச கடமைகள் இருந்தபோதிலும், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பாகுபாட்டைத் தடுப்பது, குறிப்பாக இணைய தணிக்கை காலங்களில் இந்த சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதில் சவால்கள் எழுகின்றன.

ICCPRஇன் உறுப்புரை 19இன் கீழ், கருத்துச் சுதந்திரம் எந்த வகையிலும் தகவல் மற்றும் யோசனைகளைத் தேட, பெற மற்றும் வழங்குவதற்கான உரிமையை உள்ளடக்கியது. ஆயினும் கூட, சட்டத்தால் வழங்கப்பட்டு, உரிமைகள் அல்லது நற்பெயர்கள், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம் அல்லது அறநெறிகளைப் பாதுகாக்க அவசியமானதாகக் கருதப்பட்டால், இந்த உரிமையின் மீது சட்டங்கள் மட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

இந்த தரநிலைகள் நிகழ்நிலை வெளிப்பாடுகளுக்கும் சமமான பிரயோகமாகும். இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகள் நாட்டில் இணைய தணிக்கையின் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் அதேவேளையில், அது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பிறரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உட்பட பல பகுதிகளில் கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறது. இது நிகழ்நிலை உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நியாயப்படுத்தவும் செயற்படுத்தவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.

பொலிஸ் கட்டளைச்சட்டமானது பொது அமைதி மற்றும் ஒழுங்குக்கு அச்சுறுத்தலான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் வழங்குகிறது. கட்டளைச் சட்டத்தின் 98வது பிரிவு, பீதியை உண்டாக்கும் வகையில் தவறான செய்திகளைப் பரப்புவதை குற்றமாக்குகிறது. இந்த ஏற்பாடு, சமூக ஊடகங்களில் தவறான அறிக்கைகளுக்குப் பொருந்தக்கூடியதுடன், பொது ஒழுங்குக்கான அச்சுறுத்தல்களைக் வெளிப்படுத்துகிறது. கைதுகள் அல்லது குற்றச்சாட்டுகளுக்கான அதனது பயன்பாடு குறித்து வரையறுக்கப்பட்ட தகவல்களே கிடைக்கின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டமானது, பொதுப் பாதுகாப்பு நலன்களுக்காக அவசரகாலச் சட்டங்களை (ERs) இயற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. ERகள், செயற்பாட்டுக்கு வந்தவுடன் மற்ற சட்டங்களை (அரசியலமைப்பு தவிர) விட மேலோங்குவதுடன், நீதித்துறை மீளாய்வில் இருந்து விடுபடுகின்றன. சமீபத்திய ERகளில் தவறான தகவல்களை பரப்புவதற்கான தடைகள் உள்ளடங்குவதுடன், அவசர காலங்களில் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிரூபிக்கிறது.

பாகிஸ்தானில் இணைய தணிக்கை சட்டங்களை ஆய்வு செய்தல்: குடிமக்களின் உரிமைகள் மற்றும் டிஜிட்டல் சுதந்திரத்தின் மீதான தாக்கம்

இலத்திரனியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (PECA) என்பது பாகிஸ்தானில் நிகழ்நிலை செயற்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு பிரதான சட்டமாகும். PECAஇன் பிரிவு 38, பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் தொடர்பான சேவை வழங்குநர்களுக்கு வரையறுக்கப்பட்ட சிவில் அல்லது குற்றவியல் பொறுப்பை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், 2021ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய அகற்றுதல் மற்றும் சட்டவிரோத நிகழ்நிலை உள்ளடக்க விதிகள் அகற்றுதல் கோரிக்கைகளுக்கு இணங்காமைக்கு நிதியியல் பொறுப்புக்கூறலை அறிமுகப்படுத்துகிறது.

மேலும், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகார சபை (PTA) உள்ளடக்க ஒழுங்காக்கத்தில் குறிப்பிடத்தக்க வகிபங்கினை கொண்டுள்ளது. உள்ளடக்க காலப்பகுதியில், PTAசமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்தலை அனுப்பி, கூட்டங்களை நடாத்தியதுடன் புதிய விதிகளின் கீழ் பதிவு செயன்முறைகளை ஆரம்பித்தது. முகநூல், ட்விட்டர், கூகுள் மற்றும் டிக்டொக் போன்ற முக்கிய தளங்கள் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கைகளை எதிர்கொண்டதுடன், அவை முதன்மையாக அவதூறு, ஆபாசம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பானவையாகும்.

சட்டப்பரப்பானது பல்வேறு தளங்களில் ஆயிரக்கணக்கான உள்ளடக்க விடயங்களை அகற்றுவதில் காணப்படுவது போல, டிஜிட்டல் தளங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு வலுவூட்டல் அளிக்கின்றது. பாகிஸ்தானில் பிரபலமான தளமான TikTok, காணொளிகளை அகற்றும் வகையில் ஏராளமான கோரிக்கைகளை பெற்றுள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் குறித்த கரிசனங்களை எழுப்பியது.

சட்டங்களில் பயன்படுத்தப்படும் தெளிவற்ற மொழி, 'ஒழுக்கமற்ற' மற்றும் 'ஆட்சேபனைக்குரியது' போன்ற சொற்பதங்கள், பொருள்கோடலுக்கு இடமளிப்பதுடன், இது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கும். தெளிவான வரைவிலக்கணங்கள் இல்லாமல், அரசாங்கம் இந்த சட்டங்களை தன்னிச்சையாக பயன்படுத்த முடிவதுடன், இது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

இந்த தணிக்கை நடவடிக்கைகள், பொது ஒழுக்கம் மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் டிஜிட்டல் சுதந்திரத்திற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வை ஏற்பாடுகளின்பற்றாக்குறை அதிகார துஷ்பிரயோகம் பற்றிய கரிசனங்களை எழுப்புகின்றது. பாகிஸ்தானில் இணைய தணிக்கை சட்டங்களை ஆராய்வது சட்ட ஏற்பாடுகள் நிகழ்நிலை உள்ளடக்கத்தின் மீது அதிகாரிகளுக்கு கணிசமான கட்டுப்பாட்டை வழங்குகின்ற சிக்கலான பரப்பை வெளிப்படுத்துகிறது.

சமூக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியமானதாகும். இந்தச் சட்டங்களைச் செம்மைப்படுத்துவதற்கும் பாகிஸ்தானில் டிஜிட்டல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான ஆய்வு, உரையாடல் மற்றும் சர்வதேசத் தரங்களைக் கடைப்பிடித்தல்என்பன முக்கியமானவையாகும்.

குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் செய்தி உள்ளடக்கக் கட்டுப்பாடுகளில் வெளிப்படைத்தன்மை

இலங்கையில், உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளைச் சுற்றியுள்ள தெளிவற்ற நிலை, உரிய செயன்முறை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான குறிப்பிடத்தக்க கரிசனங்களை உருவாக்குகிறது. தெளிவற்று வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகள், உள்ளடக்கத்தை அடக்குவதற்கான நியதிகள் தொடர்பில் குடிமக்களை இருட்டில் விடுகின்றன. இந்த தெளிவின்மை, அவர்களின் டிஜிட்டல் வெளிப்பாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகளைப் பற்றிய குடிமக்களின் புரிதலைத் தடுப்பது மட்டுமல்லாமல், செயன்முறையின் நியாயத்தன்மை பற்றிய வினாக்களையும் எழுப்புகிறது.

சிவில் சமூகக் குழுக்கள், வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பதிவுகளை வெளியிடுவதற்கு தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைகளை நாடியுள்ளன. எனவே, இலங்கையில் வெளிப்படைத்தன்மைக்கான போராட்டம் என்பது வெறும் பரப்புரையாற்றும் முயற்சி மட்டுமல்ல, தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அடிப்படை முயற்சியாகும்.

இதேபோல், பாகிஸ்தானில் உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குடிமக்களின் உரிமைகளுக்கு சவாலாக உள்ளது. "தவறான தகவல்களை வெளியிடுதல்" போன்ற காரணங்களை அடிக்கடி மேற்கோள் காட்டி, அரசு நிறுவனங்களால் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவுகளை நம்பியிருப்பது, தெளிவான மற்றும் பொறுப்பான செயன்முறையின் அவசியத்தை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

வெளிப்படைத்தன்மை இல்லாமல், தனிநபர்கள் தங்களது நிகழ்நிலை உள்ளடக்கம் எந்த அடிப்படையில் தடைசெய்யப்படலாம் என்பதுடன் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை சமரசம் செய்யக்கூடியது என்பது குறித்து தெரியாமல் விடுகின்றனர்.

உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, தனிமனித உரிமைகளுக்கான பாதுகாப்பாக மட்டுமல்லாமல், திறந்த உரையாடல் மற்றும் தகவலறிந்த குடிமக்களுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக சமுதாயத்தின் அடிப்படை மைல்கல்லாகவும் அமைகிறது. எனவே, உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளில் வெளிப்படைத்தன்மை என்பது ஒரு நடைமுறை சம்பிரதாயம் மட்டுமல்ல; இது டிஜிட்டல் யுகத்தில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு மூலக்கல்லாகும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட விரிவான டிஜிட்டல் கட்டுப்பாடு, நாடு தழுவிய மட்டத்தில் டிஜிட்டல் பரப்பில் ஊடுருவுவதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்குமான அவர்களின் அதிகாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நாடுகள் ஒழுங்கைப் பேணுவதற்கும் ஜனநாயகக் கொள்கைகளை பாதுகாப்பதற்கும் இடையே உள்ள நுட்பமான சமநிலையைப் பற்றிப் பிடிக்கும்போது, டிஜிட்டல் சுதந்திரத்தின் மீதான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் தாக்கங்கள் கலந்துரையாடல் மற்றும் பரப்புரையாற்றலின் மையப்புள்ளியாக இருக்கின்றன.

டிஜிட்டல் கட்டுப்பாட்டிற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை, குறிப்பாக முக்கியமான அரசியல் அபிவிருத்திகளுக்கு மத்தியில், வெளிப்படையான பேச்சு, கருத்து சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவற்றின் கொள்கைகளுக்கு சவால்களை முன்வைக்கிறது.

பரவலாக்கப்பட்ட தீர்மானமெடுக்கும் செயன்முறைகளின் பற்றாக்குறை, தன்னிச்சையான கட்டுப்பாடுகள் மற்றும் டிஜிட்டல் கோளத்துக்குள் பலதரப்பட்ட குரல்களை ஒடுக்குவதை விளைவாக்கலாம். டிஜிட்டல் யுகத்தில் தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பாதுகாப்பின் அவசியத்தை சமநிலைப்படுத்துவது ஒரு முக்கியமான சவாலாக உள்ளதுடன் இது வளர்ந்துவரும் இந்த சமூகங்களுக்குள் தொடர்ந்து ஆய்வு மற்றும் உரையாடலை தேவைப்படுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரைவில் இலங்கை - பிரான்ஸ் பொருளாதார...

2024-05-24 18:17:40
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 18:03:49
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 13:26:57
news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48