21 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

15 May, 2024 | 11:35 AM
image

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 21 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (14) செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் இவர் விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதியிலிருந்து 21 இலட்சம் ரூபா பெறுமதியான 21,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 105 சிகரெட்டு கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51