பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த சில்லறை விற்பனை விருதுகளில் அதன் உயர்மட்ட பணியாளர்களில் உள்ள விதிவிலக்கான சாதனையாளர்கள் முக்கிய இடத்தைப் பிடித்தனர்.
கடுமையான சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும், 2023 நிதியாண்டில் செய்யப்பட்ட விதிவிலக்கான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
மிகவும் கொந்தளிப்பான காலங்களிலும் வங்கியை வெற்றியடையச் செய்ததில் ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டுவதற்காக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் குதூகலமும் பெருமையும் கரைபுரண்டு ஓடியதைக் காணமுடிந்தது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதிலும் நாட்டின் செழிப்பிலும் பான் ஏசியா வங்கி காட்டிவந்த அக்கறையும் ஒற்றுமையும் இங்கு புடம் போட்டுக் காட்டப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் கிளைக்கான விருதுகள் நிகழ்வின் உச்சகட்டமாக அமைந்திருந்தன, சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பெருமையுடன் நினைவு கூரப்பட்டன பான் ஏசியா வங்கியின் தலைவர் அரவிந்த பெரேரா மற்றும் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி நளீன் எதிரிசிங்க ஆகியோர் முன்னிலையில் , வருடத்திற்கான சிறந்த கிளைக்கான விருதை பிலியந்தலை கிளை பெற்றுக்கொண்டமை அதன் சிறந்த சேவை, வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வினைத்திறன் மிக்க இயங்கம் ஆகியவற்றுக்கு சான்றாகும். கொட்டாவ கிளை இரண்டாவது இடத்தையம், ஹோமாகம கிளை மூன்றாவது இடத்தையும் சுவீகரித்துக் கொண்டன.
வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க, வெற்றியாளர்களைப் பாராட்டிப் பேசும்போது , "இந்த ஆண்டின் கிளை விருதுகள் அக்கிளைகளின் சிறந்த செயல்திறனைக் காட்டுவது மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சமூகத்துக்கும் நாங்கள் காட்டிவரும் வலுவான அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டியுள்ளது. சிறந்த சாதனைக்காகவும், கடின உழைப்பிற்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் விருது பெற்றவர்களை மனமார வாழ்த்துகிறோம்" என்றார்.
இந்த பாராட்டுக்கள் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் பான் ஏசியா வங்கி காட்டிவரும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அதன் கரிசனை ,ஆகியவற்றை தெளிவாகக் காட்டுகிறது. இவை பான் ஏசியா வங்கி இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமாக நிலைத்து நிற்பதற்கான உறுதிப்பாட்டுடன் மேலும் வளர்ச்சிக்கான பாதையில் முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் சான்றாகும்.
பான் ஏசியா வங்கியின் தலைவர் அரவிந்த பெரேரா மற்றும் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி நளீன் எதிரிசிங்க ஆகியோர் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM