bestweb

திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் தொடங்கி வைத்த 'குற்றம் புதிது'

Published By: Vishnu

15 May, 2024 | 04:33 AM
image

புதுமுக நாயகன் தருண் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே. பாக்யராஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புதுமுக நாயகனான தருணை அறிமுகப்படுத்தினார்.

அறிமுக இயக்குநர் ரஜித் இயக்கத்தில் உருவாகும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தில் தருண், செஷ்வித்தா, மதுசூதன் ராவ், ராமச்சந்திரன், 'பாய்ஸ்' ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா, தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், 'டார்லிங்' நிவேதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கரண் பி. கிருபா இசையமைக்கிறார். திரில்லர் வகையிலான திரைப்படமாக தயாராகும் இப்படத்தை ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் தருண் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயத்தை யதார்த்தமான பாணியில் விவரிக்கும் படைப்பாக 'குற்றம் புதிது' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

இப்படத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிமுக போஸ்டர் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கொலைகாரன் பின்னால ஓடக்கூடாது.. கொலைக்கு பின்னால...

2025-07-18 19:19:29
news-image

காளி வெங்கட் - தர்ஷன் இணைந்து...

2025-07-18 19:01:16
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2025-07-18 17:43:24
news-image

நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையில் இணையும்...

2025-07-18 17:43:55
news-image

விஜய் சேதுபதி நடிக்கும் 'தலைவன் தலைவி'...

2025-07-18 17:42:41
news-image

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சீயான்...

2025-07-18 16:39:53
news-image

சட்டமும் நீதியும் - இணைய தொடர்...

2025-07-18 16:36:13
news-image

டிரெண்டிங் - திரைப்பட விமர்சனம்

2025-07-18 16:16:27
news-image

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்...

2025-07-17 20:11:33
news-image

கவனம் ஈர்க்கும் நடிகர் பரத்தின் 'காளிதாஸ்...

2025-07-17 17:26:41
news-image

நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின்...

2025-07-17 17:27:32
news-image

சாதனை படைக்கும் வடிவேலு - பகத்...

2025-07-17 17:27:01