(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பலஸ்தீனுக்கு பணம் சேகரிப்பதற்கு பதிலாக இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக முடியுமான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் ஹவ்தி போராளிகளை அடக்குவதற்கு எமது கடற்படையை செங்களுக்கு அனுப்பும் ஜனாதிபதி, இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் எனவும் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையை ஆட்சி செய்துவந்த அனைத்து அரச தலைவர்களும் ஆரம்ப காலம் தொட்டு பலஸ்தீனுக்கு ஆதரவளித்து வந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ்வுடன் எமக்கு உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் பலஸ்தீன் விடயத்தில் உறுதியாக இருந்து செயற்பட்டார். அதேபோன்று ரணசிங்க பிரேமதாச எமது நாட்டில் இருந்த இஸ்ரேல் காரியாலயத்தை மூவிட்டு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு அப்பால் சென்று பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பலஸ்தீன் மக்களுக்காக ஜனாதிபதி நிதியம் ஒன்றை ஆரம்பித்து பணம் திரட்டி வருகிறார். ஆனால் அவர் பணம் திரட்டி பலஸ்தீனத்துக்கு அனுப்பும்போது பலஸ்தீனில் பிள்ளைகள் இருக்காமல் போகலாம், அங்கு மக்கள் இருக்காமல் போகலாம்.அதனால் நிதி திரட்டுவதைவிட இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமான விடயங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியுமான விடயங்கள் இருக்கின்றன.
எமது அண்மை நாடான மாலைதீவு இஸ்ரேலியர்கள் அந்த நாட்டுக்குள் வருவதை தடை செய்துள்ளது. அதேபோன்று மத்திய கிழக்கில் பல நாடுகள் இஸ்ரேலுடன் இருக்கும் தொடர்புகளை நிறுத்தியுள்ளன. அதனால் நாடு என்றவகையில் எமக்கும் சில அழுத்தங்களை இஸ்ரேலுக்கும் ஏற்படுத்த முடியும்.
பலஸ்தீனர்கள் தொழில் செய்துவந்த இடங்களில் இருந்து இஸ்ரேல் அவர்களை நிறுத்தி இருக்கிறது. அந்த இடங்களுக்கே தற்போது தொழில் நிமித்தம் இலங்கையர்கள் அனுப்பப்படுகிறார்கள். அதனால் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் யோசனை ஒன்றை முன்வைக்கிறோம்.
அதேபோன்று அண்மையில் இஸ்ரேல் ஆலாேசனை காரியாலயம் ஒன்று எமது நாட்டில் திறக்கப்பட்டது. இதன் மூலம் இஸ்ரேலியர்களை நாட்டுக்குள் கொண்டுவருவதே இவர்களின் திட்டமாகும். இந்த காரியாலயத்தை மூடச்செய்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஏன் ஜனாதிபதி இதனை செய்யாமல் இருக்கிறார்.
ஒரு பக்கத்தில் ஜனாதிபதி பலஸ்தீனுக்காக நிதி திரட்டி வருகிறார். மறு பக்கத்தில் இஸ\ரேலியர்களை நாட்டுக்குள் கொண்டுவர தேவையான வழிகளை ஏற்படுத்தி வருகிறார். இது இரட்டை நிலைப்பாடு. எமது அரச தலைவர்கள் இராஜதந்திர நடவடிக்கைகளின்போது இவ்வாறான கொன்கையை பின்பற்றவி்லலை. எமது அரச தலைவர்கள் இவ்வாறான வெளிவிவகார கொள்கையை பின்பற்றவி்லலை.
கடந்த மாதம் ஈரான் ஜனாதிபதி நாட்டுக்கு வந்தபோது அவரை வரவேற்று இராபோசனம் வழங்கி வழியனுப்பிய ஜனாதிபதி, மறுநாள் காலை காலி முகத்திடலில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கை ஜனாதிபதி ஊஞ்சலில் ஏற்றி, அவரை தள்ளிக்கொண்டிருக்கிறார்.
இதுவா இவர்களின் வெளிநாட்டு கொள்கை. அதேபோன்று செங்கடலில் இஸ்ரேலுக்கு எதிராக ஹவ்தி போராலிகள் நடவடிக்கை எடுக்கும்போது, அதனை அடக்குவதற்காக அமெரிக்கா செங்கடலுக்கு தங்களின் யுத்தக் கப்பல்களை அனுப்பும்போது, எமது ஜனாதிபதியும் ஹவ்தி போராலிகளுக்கு எதிராக செயற்பட எமது கடற்படையை செங்கடலுக்கு அனுப்புகிறார். ஆனால் வடக்கு கடல் எல்லையால் எமது கடற்பரப்புக்கு வரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே ஜனாதிபதி வெளிவிவகார விடயத்தில் இரட்டை வேஷத்தை நிறுத்திவிட்டு, பலஸ்தீன் விடயத்தில் இதுவரை பின்பற்றிவந்த பிளவுபடாத, பலஸ்தீனத்துக்கு ஆதரவு கொள்கையை தொடர்ந்து பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM