கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சுமந்திரன் எம்.பியே  காரணம் - ஹரீஸ் எம்.பி 

Published By: Vishnu

14 May, 2024 | 09:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சுமந்திரன் எம்.பி.தான் காரணம். அவர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினாலே இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி எம்.பி.எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட அரச அதிபர்  தமிழர்களுக்கு எதிரானவர் என்ற கருத்தை  கடந்த பாராளுமன்ற அமர்வில் பேசிய யாழ் எம்.பி.யான கஜேந்திரன் முன்வைத்தார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு எதிராக அவர் செயற்படுவதாகவும்  குற்றம்சாட்டினார். அதனை நான்  நிராகரிக்கின்றேன்.

அம்பாறை மாவட்ட அரச அதிபர் தமிழ்,முஸ்லிம், சிங்களவர் என்ற பேதம் பாராமல் செயற்படும் ஒருவர். அவர் அங்கு சிறந்த சேவையை வழங்குகின்றார். அவர் ஒரு அரச அதிகாரி. சட்டத்துக்  குட்பட்டுத்தான் செயற்பட முடியும். யாழ்ப்பாணத்தை  சேர்ந்த கஜேந்திரன் எம்.பிக்கு அம்பாறை மாவட்டம் பற்றியோ கல்முனை பற்றியோ எதுவுமே தெரியாது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சுமந்திரன் எம்.பி.தான் காரணம். அவர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஒன்றினால்தான் இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் அரசாங்கத்துக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே இதனை ஒரு இனவாத பிரச்சினையாக மாற்ற வேண்டாம். கல்முனை தமிழ் மக்களுக்கு செயலகம் வழங்குவதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம் என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 13:51:24
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47