(நெவில் அன்தனி)
அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியின் தலைவராக இந்த வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸிம்பாப்வேக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாக ரி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 15 வீரர்களைக் கொணட குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று அறிவித்தது.
அனுபவம் வாய்ந்த சகலதுறை வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஷக்கிப் அல் ஹசனும் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அவர் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஸிம்பாப்வேக்கு எதிரான கடைசி இரண்டு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், நான்காவது போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பங்களாதேஷின் ரி20 உலகக் கிண்ண குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் தொடர்ச்சியாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர்களாவர்.
ஸிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் தன்சிம் ஹசன் சக்கிப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளுடன் டி குழுவில் பங்களாதேஷ் இடம்பெறுகிறது.
பங்களாதேஷின் முதலாவது போட்டி இலங்கைக்கு எதிரானதாகும். அப் போட்டி டல்லாசில் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பங்களாதேஷின் தலைமைப் பயிற்றுநராக முன்னான் இலங்கை வீரர் சந்திக்க ஹத்துருசிங்க செயற்படுகிறார்.
பங்களாதேஷ் குழாம்
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), தஸ்கின் அஹமத், லிட்டன் தாஸ், சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன் தமீம், ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய், மஹ்முத் உல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசெய்ன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் சக்கிப்.
பயணிக்கும் பதில் வீரர்கள்: அபிப் ஹொசெய்ன், ஹசன் மஹ்முத்
அனைத்து அணிகளும் மே 25 வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால் ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் பெறப்படவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM