எம்மில் பலருக்கும் திருமண வயதை எட்டிய பிறகு ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இது தமிழர்களிடம் மட்டுமல்லாமல் மனிதர்களுடைய பாரம்பரிய மரபாகும். திருமணம் என்பது சமூகத்தில் குழுவாக வாழ்வதற்கான வெளிப்படையான சட்டபூர்வமான ஒப்பந்தமாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, வாழ்க்கைக்கான பற்றுக்கோடு என பல உள்ளார்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்ட திருமண பந்தத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என எம்முடைய முன்னோர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்றாலும், இன்றைய சூழலில் பல இளம் ஆண்களுக்கும் இளம் பெண்களுக்கும் திருமணம் என்பது கனவாகவே இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள அவர்கள் மனதளவில் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு பல்வேறு கோணங்களிலிருந்து எதிர்பாராத வகையில் பலவித மாய தடைகள் ஏற்படுகிறது.
இது தொடர்பாக இளம் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் பல சூட்சமமான விடயங்கள் புரிவதில்லை. ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் இவ்விடயத்தில் இறை நம்பிக்கை மீதும், ஆன்மீகப் பெரியோர்களின் வழிகாட்டலை தொடர வேண்டும் என்பதிலும் பெரு விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காகவே எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் கோமுக தீர்த்த பரிகாரம் ஒன்றை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆலயத்திலும் மூலவர் வீற்றிருக்கும் கருவறையின் இடது புறத்தில் மூலவர் அபிஷேகம் செய்த தண்ணீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன் என ஏராளமான அபிஷேக பொருட்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, அவை கோமுக தீர்த்தம் வழியாக வெளியேற்றப்படுகிறது. சிவாலயமாக இருந்தாலோ அல்லது பெருமாள் ஆலயமாக இருந்தாலோ அபிஷேகம் செய்த நீர் கோமுக தீர்த்தம் வழியாகத்தான் வெளியேறும். சில ஆலயங்களில் இந்த கோமுக தீர்த்தத்தை இறைவனை வழிபட்டு நாம் வலமிருந்து இடமாக சுற்றி வரும் போது பிரம்மா வீற்றிருந்து அருள்பாலிக்கும் உருவ சிலைக்கு கீழே இந்த கோமுக தீர்த்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோமுக தீர்த்த பாதையை பக்தர்கள் கடக்கும் போது இதிலிருந்து மணம் வீசும். இந்த மணம் சிலருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கும்.
இந்நிலையில் திருமண தடை உள்ள இளம் பெண்களும், ஆண்களும் இந்த கோமுக தீர்த்தம் மற்றும் கோமுக தீர்த்தம் செல்லும் பாதையை சுத்தப்படுத்த வேண்டும். அங்குள்ள ஆலய நிர்வாகத்திடம் அல்லது இறைவனுக்கு தொண்டு செய்யும் இறை ஊழியரிடம் அனுமதி பெற்று கோமுக தீர்த்தம் செல்லும் பாதையை சுத்திகரிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக இருபத்யொரு நாட்கள் சுத்தப்படுத்த வேண்டும். அதன் பிறகு இருபத்தியோராவது நாள் அபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக கோமுக தீர்த்த பாதையை சுத்தப்படுத்தி விட வேண்டும். இருபத்தியோராவது நாளில் நீங்கள் இறைவனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும்போது கோமுக தீர்த்தத்தில் அந்தப் பால் வருகை தரும் போது அதனை கையில் ஏந்தி தீர்த்தமாக பருக வேண்டும். அதனை ஒரு முறை பருகி அதன் பிறகு இறைவனிடம் திருமணம் சுகமாக நடந்தேற வேண்டும் என கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக இருபத்தியொரு நாட்களும் வேறு எந்த சிந்தனையும் இன்றி திருமணம் விரும்பிய வண்ணம் எந்தவித தடையும் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு கோமுக தீர்த்தத்தை சுத்தப்படுத்தும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டால் உங்களது கோரிக்கை நிறைவேறும்.
திருமண தடை மட்டும் அல்லாமல் உங்களுடைய புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், உயர்கல்வி கற்பதில் உள்ள தடை என பல கோரிக்கைகளும் இத்தகைய கோமுக தீர்த்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும், கோமுக தீர்த்தத்தில் வரும் இறைவனின் அபிஷேக பாலை அருந்துவதன் மூலமும் இறைவனின் பரிபூரண அருள் கிட்டி உங்கள் வேண்டுதல் நிறைவேறுவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM