சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ராவ் ரமேஷ், ஷாஜி, ரமேஷ் திலக், ரக்சன், ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகனான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பகுதிகளின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாலும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாலும் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM