எம்மில் பலரும் நாளாந்தம் ஐந்து முதல் எட்டு மணி தியாலத்திற்கும் அதிகமாக தொடர்ந்து நின்று கொண்டே பணிபுரிவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய கணுக்கால் மற்றும் கால்பகுதியில் சுருள் சிரை நரம்பு பாதிப்பு ஏற்படும்.
இதனை எளிதாக விவரிக்க வேண்டும் எனில், எம்முடைய உடலின் அனைத்து பகுதிக்கும் இதயத்திலிருந்து ரத்தம் சீரான விசையுடன் உந்தப்படுகிறது.
இதன் காரணமாக உடல் முழுவதும் பரவும் ரத்தம் மீண்டும் இதயத்திற்கு வருகிறது. இதயத்திலிருந்து உடலுக்கு செல்வதற்கு ஒரு பாதையும், உடலின் வேறு பகுதியிலிருந்து இதயத்திற்கு வருகை தருவதற்கு வேறொரு பாதையும் என எம்முடைய உடலில் இயற்கையாகவே ரத்த குழாய் அமைப்பு அமைந்திருக்கிறது.
இந்நிலையில் கால் பகுதி வரை செல்லும் ரத்தம் அசுத்தமடைந்து, அவை இதயத்திற்கு செல்லும் போது பல்வேறு இடையூறுகள் காரணமாகவோ அல்லது இதற்கென அமையப்பெற்று இருக்கும் பிரத்தியேக ரத்த குழாய்களில் கசிவு, அடைப்பு போன்ற குறுக்கீடு இருந்தாலோ அல்லது அவை பலவீனமாக இருந்தாலோ அசுத்தமான ரத்தம் இதயத்திற்கு செல்லாமல் அங்கேயே தேக்கமடைந்து விடுகிறது. இது நாளடைவில் கால் பகுதி மற்றும் கணுக்கால் பகுதியில் தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் அங்குள்ள நரம்புகளையும் வீங்க செய்து அசௌகரியத்தையும், சுகவீனத்தையும் உண்டாக்குகிறது.
இதற்கு சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வாக கருதப்பட்டு வந்தது. தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் நுண்துளை சத்திர சிகிச்சை மற்றும் வெப்ப கதிர் வீச்சு சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நரம்புகள் உடலில் அணைத்து பகுதிகளுக்கும் ஓக்சிஜனை எடுத்து செல்கிறது. இதற்காக பிரத்யேக குழாய்கள் உண்டு. இவை இதயத்தின் சீரான உந்துவிசையினால் இயங்குகிறது. இவை உடல் முழுவதும் நல்ல ரத்தத்தை பாய்ச்சுவதுடன் உடலில் உள்ள அசுத்தமான ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு எடுத்து வரும் பணியினை செய்கிறது. சுழற்சி முறையில் நடைபெறும் இந்தப் பணியில் கால் பகுதியிலிருந்து அசுத்தமான ரத்தம் சரியான திசையில் பயணிக்காமல் நரம்பு பலவீனம், நரம்பு சேதம், நரம்பு வீக்கம், நரம்பு விரிவடைதல் போன்ற பல்வேறு பாதிப்புகளால் இதயத்திற்கு செல்லாமல் கால்பகுதியில் தேக்கமடைந்து விடுகிறது. இது அந்தப் பகுதியில் உள்ள நரம்பின் செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தோலில் நிற மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்தத்தின் சுழற்சி முறையை தடை செய்கிறது. இதற்கு வெரிகோஸ் வெயின் என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு தற்போது எண்டோவெனஸ் லேசர் சிகிச்சை எனும் நவீன வெப்ப கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தகைய சிகிச்சையின் போது கால்பகுதியில் சிறிய அளவில் துளையிடப்பட்டு, அதன் மூலமாக பாதிக்கப்பட்ட நரம்பு பகுதிக்கு ஒரு குழாய் உட்செலுத்தப்படுகிறது.
அதன் பிறகு அக்குழாய் வெப்பப்படுத்தும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் வெப்பப்படுத்தி பாதிக்கப்பட்ட நரம்புப் பகுதியில் தவறுதலாக சேகரிக்கப்பட்டிருக்கும் நரம்பு பகுதி வெப்பப்படுத்தி அகற்றப்படுகிறது. இதன் மூலம் கால்பகுதியிலிருந்து இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வது உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் பிரத்யேக காலுறையை தற்காலிகமாக அணிந்து கொள்ள வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில தினங்களிலேயே நாளாந்த வாழ்க்கையை நோயாளிகள் மேற்கொள்ள இயலும்.
இந்த சிகிச்சையின் கால அளவு ஒரு மணித்தியாலம் என்பதாலும், மிக சிறிய அளவிலேயே துளையிடப்படுவதாலும், விரைவாக நாளாந்த வாழ்க்கைக்கு திரும்ப முடிவதாலும் இத்தகைய நவீன வெப்ப கதிர் வீச்சு சிகிச்சைக்கு நோயாளிகளிடத்தில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
வைத்தியர் அருணகிரி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM