காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
அவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 100பேருக்கு அடைக்கலம் அளித்திருந்த காஜா குடும்பத்தின் நான்குமாடி வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்களை டெய்ர் அல் பலாலில் உள்ள அக்அக்சா தியாகிகள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள சிஎன்என்னின் ஊடகவியலாளர் ஒருவர் குண்டுவீச்சில் சிக்கியவர்களுடன் தான் உரையாடியவேளை நால்வர் தங்கள் குடும்பங்களை சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளன என தெரிவித்தனர் என குறிப்பிட்;டுள்ளார்.
சிறுவர்கள் உட்பட பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருப்பதையும் மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்க முயல்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM