(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்த சட்டமூலத்தால் ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்களின் கருத்துகளை போதியளவு ஆராயாமல் இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.
இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டம் தொடர்பில் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த வரைவில் சுதந்திர ஊடகத்திற்கு பாதகம் விளைவிக்கும் பல முன்மொழிவுகள் உள்ளன.
போதியளவு மக்கள் மத்தியில் கலந்தாலோசிக்காமல், ஏனைய தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியாமல் இந்த திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தில் சுதந்திர ஊடகத்திற்கு பாதகமான பல ஷரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இழப்பீட்டைச் செலுத்தி தமது ஊடக அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுதல், ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய பொது மக்களின் நலன் தொடர்பில் ஆணைக்குழுவே ஒரு பொருள்கோடலை வழங்கி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கான யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமான சுதந்திரமான நாட்டில் சுயாதீனமான சுதந்திரமான ஊடகம் இருக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்டுப்பட்டுள்ள நாமனைவரும் இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற ஷரத்துக்கள் தொடர்பில் எமது கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறோம். இதனை நாம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்.
இதனை மேற்கொள்வதற்கு முன்னர். தயவு செய்து இதனை மீளப் பெறவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறோம். மக்களின் நலன், ஊடகங்களின் நலன் தொடர்பில் இந்நாட்டில் தீர்மானங்களை எடுப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை.
பொதுமக்களின் நலன் ஒருபுறமிருக்க இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிலுள்ள அதிகாரிகள் டிசிபி வழங்குவதாகவும், ஆளுங்கட்சிக்கு வருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரசாரம் செய்கின்றனர்.
இது இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கடமையல்ல. ஆகவே டீ.ஆர்.சி இன் கடமைகளை ஆணைக்குழுவிற்கு கையளித்தால், பொருட்கோடலை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் இந்நாட்டின் சுதந்திர ஊடகம் அற்றுப்போகும். ஆகவே இந்த ஷரத்துகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM