கண்டி-கலஹா நகரில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு நகரில் உள்ள இரு வீடுகளையும் ஒரு வியாபார நிலையமும் உடைத்து திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கலஹா நகரில் உள்ள ஒரு வீட்டில் 4 பவுன் பெறுமதியான தாலிகொடி, மற்றுமொரு வீட்டில் துவிச்சக்கர வண்டி மற்றும் வியாபார நிலையத்தை உடைத்து கையடக்க தொலை பேசி (apple phone ) ஆகியவற்றை சிறுவன் திருடி சென்றுள்ளான்.
இதனை தொடர்ந்து கலஹா பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் முறைப்பாட்டு செய்ததையடுத்து, கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குனசேகர தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொருட்களை திருடிய நில்லம்பை பகுதியைச் சேர்ந்த 15 வயது சந்தேக நபரான சிறுவனை கலஹா ஆரேக்கர் மைதானத்தில் இருந்த போது கைது செய்துள்ளனர்.
கைது செய்து விசாரணையின் போது பொலிஸார் பொருட்கள் மீட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (14) சந்தேக நபர் கலஹா பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM