டெல்லியில் 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

14 May, 2024 | 02:30 PM
image

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தினுள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், “மே 12-ம் தேதி அடையாளம் தெரியாத மின்னஞ்சல் கணக்கில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுத்திருந்த நபர் விமான நிலைய வளாகத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதேபோல் புராரி அரசு மருத்துவமனை மற்றும் மங்கல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பத்து மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தன” என்றனர்.

முன்னதாக, மே 1-ம் தேதி டெல்லியில் உள்ள 150-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தன. நீண்ட தேடுதல், விசாரணைக்கு பின்னர், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில்...

2024-07-22 22:45:00
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா...

2024-07-22 14:51:10
news-image

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி...

2024-07-22 14:54:21
news-image

அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு...

2024-07-22 12:12:16
news-image

கமலா ஹரிசிற்கு கறுப்பின பெண்கள் ஆதரவு

2024-07-22 11:51:46
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு காலை இழந்த...

2024-07-22 11:22:16
news-image

14 வயது சிறுவன் உயிரிழப்பு: நிபா...

2024-07-22 10:00:33
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக...

2024-07-22 06:51:47
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகினார்...

2024-07-21 23:43:24
news-image

மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களிற்கு காரணமான வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு...

2024-07-21 16:26:26
news-image

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் -...

2024-07-21 12:36:52
news-image

பங்களாதேஷில் வன்முறை; ஊரடங்கு; பல்கலைக்கழகங்களில் சிக்கிய...

2024-07-21 12:18:48