19 வயது யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

14 May, 2024 | 02:35 PM
image

19 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குருணாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதி நேற்று (13) பிற்பகல் குருணாகல் - மாவத்தகம பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்பு நிலையமொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இந்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, இந்த மேலதிக வகுப்பு நிலையத்தில் இருந்த சிசிரிவி கமராக்களை கண்காணித்துக் கொண்டிருந்த நபர்கள் சிலர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த பகுதியை அவதானித்துள்ள நிலையில் அதனைச் சோதனையிடச் சென்றப் போது இந்த யுவதி சந்தேக நபரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதை கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர்கள் இந்த யுவதியைச் சந்தேக நபரிடமிருந்து காப்பாற்றி இது தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-15 06:26:02
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24