கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன் கைகோர்க்கும் HNB FINANCE !

14 May, 2024 | 03:24 PM
image

இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள HNB FINANCE, நாட்டின் கிராமப்புற மக்களுக்கு தனது புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்காக, பல சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்தன் மூலம், இதுவரை HNB FINANCE நிதிச் சேவைகள் அல்லது பிற புத்தாக்கமான நிதிச் சேவைகளை அனுபவிக்காத தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்கள் HNB FINANCE மூலம் தங்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, HNB FINANCE இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத், பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதுரங்க ஹீன்கெந்த மற்றும் ஏனைய அதிகாரிகளும் சிக்கன மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களின் கௌரவத் தலைவர்கள், பொது முகாமையாளர்கள் மற்றும் செயலாளர்களும் கலந்து கொண்டதுடன், மேலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி பிரதி ஆணையாளர் தலைமையில் கூட்டுறவு திணைக்களத்தின் தலைமையக பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பல தசாப்தங்களாக இலங்கை மக்களுக்காக புத்தாக்கமான வங்கிச் சேவைகளை வழங்கி வரும் HNB இன் துணை நிறுவனமாக HNB FINANCE இன் சிறந்து விளங்குவதுடன் சர்வதேச மட்ட வங்கிச் சேவைகளையும் இலங்கை கூட்டுறவுச் சங்க வர்த்தகத்தில் 118 வருட நுண்நிதி அனுபவத்தையும் 8 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு வழங்கி வருகின்றது. இலங்கை முழுவதும் இதன் மூலம் நிதி சேவைகளை வழங்க முடியும். தற்போது நாடு முழுவதும் இயங்கி வரும் 13,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து HNB FINANCE தனது நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

இது தொடர்பாக, HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கை முழுவதும் பரவியுள்ள கிராமப்புற மக்களுக்கு கூட்டுறவு வணிகத்தில் நுண்நிதித் துறையில் அனுபவமுள்ள சிக்கன மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து மேம்பட்ட நிதி வசதிகளை வழங்க முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை மக்களுக்கு எப்பொழுதும் திறமையான மற்றும் வசதியான நிதிச் சேவைகளை வழங்கி வரும் HNB FINANCE, பல்வேறு நிதிச் சேவைகள் மூலம் அவர்களை வலுவூட்டுவதற்குப் பணியாற்றியுள்ளது. இந்த உறவின் மூலம், கிராமப்புற மக்கள் தங்கள் சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கத்தின் மூலம் இணையற்ற நிதி சேவைகளை அனுபவிக்க முடியும்.” என தெரிவித்தார்.

இதன் கீழ், கிராமப்புற மக்களுக்கு HNB FINANCE இன் தங்கக் கடன் வசதிகள், நிலையான மற்றும் வழக்கமான சேமிப்பு வசதிகள், லீசிங், சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கார்ட் வசதிகள் போன்ற பல நிதிச் சேவைகளை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக தங்கக் கடன் சேவைகளில் குறைந்தபட்ச வட்டியில் அதிகபட்ச முன்பணத் தொகையைப் பெறுவது கிராமப்புற மக்களின் நிதித் தீர்வுகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். வழக்கமான மற்றும் நிலையான சேமிப்புகளுக்கு விதிவிலக்காக அதிக வட்டி விகிதங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புற மக்களின் எதிர்காலத்திற்கு அவர்களுக்குத் தேவையான கடன்கள் மற்றும் லீசிங் வசதிகளை குறைந்தபட்ச வட்டி மற்றும் சலுகைத் தவணை முறையின் கீழ் எளிதாகவும் விரைவாகவும் பெறுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

வரையறுக்கப்பட்ட பஹலவல சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கத்தின் கெளரவத் தலைவர் சட்டத்தரணி திரு. கே.ஜி. விஜேரத்ன கூறுகையில், "8 மில்லியனுக்கும் அதிகமான எமது உறுப்பினர்களுக்காக இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE இன் நிதிச் சேவைகளுக்கு பங்களிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது நமது கிராமப்புற மக்களின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நான் நம்புகிறேன். பல தசாப்தங்களாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள HNB இன் துணை நிறுவனமாக, HNB FINANCE ஆல் அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க முடிகிறது. அத்தகைய அமைப்பில் இணைவதன் மூலம் எங்கள் உறுப்பினர்களின் அனைத்து நிதிப் பிரச்சினைகளையும் தீர்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

இந்த ஒத்துழைப்பின் சிறப்பு என்னவென்றால், வங்கி மற்றும் நிதிச் சேவைகளை எளிதில் அணுக முடியாத கடினமான மாகாணங்களைச் சேர்ந்த மக்கள், மிக நெருக்கமான நம்பகமான நிறுவனமான கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் சங்கத்துடன் இணைந்து அதிக அளவிலான நிதி வசதிகளை அனுபவிக்க முடியும். HNB FINANCE தனது தனித்துவமான நிதிச் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை பெற்றுள்ளமை விசேட அம்சமாகவும் குறிப்பிடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03