2024 ஏப்ரல் 29 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் Southern MICE Expo 2024 நிகழ்வு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி நிகழ்வானது 2024 மே 27 முதல் 31 வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான (Meetings, Incentives, Conferences, Exhibitions and Events - MICE) முன்னணி இடமாக இலங்கையின் தென்மாகாணத்தை நிலைநிறுத்தும் Southern MICE Expo 2024 நிகழ்வானது, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அங்கீகாரத்துடன், இலங்கை மாநாட்டு பணியகத்தால் (Sri Lanka Convention Bureau - SLCB) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பிராந்தியத்தை வணிக நோக்குடனான சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையில் மேம்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
தென்மாகாணம் கொண்டுள்ள விசாலமான வளர்ச்சி வாய்ப்புக்களை சர்வதேச MICE முகவர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு காண்பிப்பதற்கான தனித்துவமான மேடையாக Southern MICE Expo 2024 நிகழ்வு அமையும்.
Southern MICE Expo 2024 நிகழ்வில் கலந்துகொள்வதற்கு 115 MICE கொள்வனவாளர்கள் மற்றும் பல்வேறுபட்ட சர்வதேச நாடுகளிலிருந்து ஊடக பிரதிநிதிகளுக்கு SLCB அழைப்பு விடுத்துள்ளது.
அவற்றுள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜேர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பங்களாதேஷ், கட்டார், மலேசியா, ஜப்பான், ஈரான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் அடங்கியுள்ளன.
வணிக வாய்ப்புக்களுக்கான பொதுமன்றம், வணிகங்களுக்கிடையிலான வர்த்தக வாய்ப்புக்கள் (B2B), குறிப்பிட்ட கருப்பொருளுடனான இரவுப் பொழுது, தென் பிராந்தியத்தை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா ஏற்பாடுகள் அடங்கலாக, பல்வேறுபட்ட தரப்பினருக்கிடையில் மகத்தான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பினை இந்நிகழ்வு வழங்கும்.
உள்நாட்டு வணிகர்கள், வெளிநாட்டு வணிகர்களுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பினை Southern MICE Expo நிகழ்வு தோற்றுவிக்கும். அந்த வகையில், உள்நாட்டிலிருந்து இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளவர்களுக்கு இதில் பங்கேற்பதற்கான கட்டணம் மானிய அடிப்படையில் அறவிடப்படும்.
சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து அவர்கள் இதற்கு ஓயாத ஆதரவை வழங்கி கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் தென் மாகாணத்தை MICE சுற்றுலாத்துறைக்கு பிரகாசமான வாய்ப்புக்கள் கொண்ட இடமாக காண்பிப்பதற்கு உழைத்து வருகின்ற SLCB க்கு ஆதரவு வழங்குவதில் நாம் பெருமை கொள்கின்றோம்.
வணிக நிகழ்வுகள் வலுமிக்கவையாக மாற்றம் கண்டு வருகின்ற ஒரு உலகில், தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றுசேர்த்து, உள்நாட்டுப் பொருளாதாரங்களுக்கு ஆதரவளித்து, விருந்தினர்கள் மற்றும் நிகழ்வுகளை நடாத்துகின்றவர்கள் மத்தியில் நீடித்து நிலைக்கும் நற்பயனைத் தோற்றுவித்து, இலங்கையில் ஒப்பற்ற MICE அனுபவங்களுக்கான கதவுகளைத் திறந்து விடுவதே Southern MICE Expo 2024 நிகழ்வின் அபிலாஷையாக காணப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் திரு. எச்.எம்.பி.பீ. ஹேரத் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “Southern MICE Expo 2024 நிகழ்வானது பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதுடன், நேர்மறையான மாற்றத்திற்கான உந்துசக்தியாகவும் மாறும். இலகுவாகவும், சிக்கனமாகவும் அமையக்கூடிய வகையில் மிகவும் பெறுமதிமிக்க MICE இடமாக MICE சுற்றுலாத்துறை சந்தைகள் இலங்கையை இனங்காண இது உதவுவதுடன், தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வரலாறு, அபரிமிதமான இயற்கை அழகு, மற்றும் புதுமையான அனுபவங்களின் தெரிவு ஆகிய சிறப்பம்சங்களும் இதனுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறை சேவை வழங்குனர்கள் அறிமுகமாகி, தமக்கிடையில் தொடர்புகளை வளர்த்து, பரஸ்பரம் வளர்ச்சி கண்டு, ஒரு இடம் என்ற வகையில் இலங்கை MICE பிரயாணிகளுக்கு எவற்றையெல்லாம் வழங்குகின்றது என்பதை காண்பிப்பதற்கு மிகச் சிறந்ததொரு மேடையாக Southern MICE Expo 2024 நிகழ்வு அமையுமென நான் நம்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் இதன் நோக்கம் தொடர்பில் SLCB இன் தலைவர் திசும் ஜெயசூரிய அவர்கள் விளக்குகையில், “துடிதுடிப்பான கலாச்சாரம் மற்றும் கரையோர அழகு ஆகியவற்றின் தனிச்சிறப்புமிக்க கலவையைக் கொண்ட தென் பிராந்தியம், மக்களின் சமூக ஊடக இடுகைகள் மூலமாக உலகினை எட்டுவதற்கான மகத்தான வாய்ப்புக்கள் கொண்ட, மிகவும் உகந்த MICE இடத்தை வழங்கும். அந்த வகையில், எமது செயல்பாடுகள் அனைத்திலும் நிலைபேறாண்மை என்பது மையப்புள்ளியாக காணப்படுவதால், உள்நாட்டு பொருளாதாரங்களை மேம்படுத்தி, உள்நாட்டு வணிகங்களுக்கு நீடித்து நிலைக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதில் எமது கவனம் தங்கியுள்ளது. இதற்கமைவாக நாட்டின் பல பாகங்களிலும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய நாம் ஆரம்பித்துள்ளதுடன், இது அந்தந்த பிராந்தியங்களின் சிறப்பினைக் காண்பிப்பது மட்டுமன்றி, அங்கு உள்நாட்டு பொருளாதாரங்களை மேம்படுத்தவும் உதவுகின்றது. பாரம்பரியமாக எமது செயல்பாடுகளை முன்னெடுப்பதிலிருந்து விலகி, உள்நாட்டு வணிகங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கி, மிகவும் ஈர்க்கச்செய்கின்ற அனுபவங்களை வழங்க நாம் முயற்சித்து வருகின்றோம். எனவே இந்நிகழ்வில் பங்குபற்ற ஆர்வமாகவுள்ள அனைத்து சர்வதேச முகவர்களையும் SLCB இதற்கு வரவேற்பதுடன், எமது பூரண ஆதரவை வழங்குவதற்கும் தயாராகவுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
கடந்தகால MICE கண்காட்சி நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில், முதன்மையான MICE நாடாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான SLCB இன் ஆணைக்கு அமைவாக, “MICE Expo” என்ற வர்த்தகநாமத்தை வலுப்படுத்தி, வளர்ப்பதற்கு SLCB உறுதிபூண்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் உலகளாவில் பரவிய காலகட்டத்தின் போது மெய்நிகர் MICE Expo நிகழ்வுடன் 2021 ஆம் ஆண்டில் இதன் ஆரம்ப எண்ணக்கரு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் நேரடி MICE Expo Colombo நிகழ்வும், வடக்கில் Nothern MICE Expo 2023 - Jaffna நிகழ்வும் இடம்பெற்றன. எதிர்காலத்தில் மத்திய மலைநாடு மற்றும் கலாச்சார முக்கோணம் போன்ற ஏனைய பிராந்தியங்களில் MICE Expo நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, சர்வதேச MICE சுற்றுலாத்துறை சந்தையைக் கைப்பற்றுவதற்கு SLCB எண்ணியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM