நான்காம் கட்ட இந்திய பாராளுமன்ற தேர்தல் - 67 சதவீத வாக்குப்பதிவு..!

Published By: Digital Desk 3

14 May, 2024 | 01:02 PM
image

இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் நிறைவடைந்த நான்காம் கட்ட தேர்தலில் 67 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் என இந்தியாவின் பத்து மாநிலங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக மே 13 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்றது.

ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள பாதை வசதி குறைவான பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலமும், படகு மூலமும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சில தொகுதிகளில் மட்டும் ஆளும் வை.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் சிறிய அளவிலான வன்முறை நடைபெற்றது. இது தொடர்பாக இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.  மேலும் மேற்கு வங்கம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களிலும் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் 78.44 சதவீதமும், ஆந்திர பிரதேசத்தில் 78. 25 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 70.98 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 65.31 சதவீதமும், தெலுங்கானாவில் 64.87 சதவீதமும்,  உத்தர பிரதேசத்தில் 56.35 சதவீதமும், பீகாரில் 54.14 சதவீதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 52.49 சதவீத வாக்குகளும் பதிவாகின. மிகக் குறைந்த அளவாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 38 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதைத்தொடர்ந்து தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நான்காம் கட்ட தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்கு சதவீதம் விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நிறைவடைந்த மூன்று கட்ட தேர்தல்களில் கடந்த 2019 ஆம் ஆண்டை விட வாக்குப்பதிவு குறைவு என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக அளவில் வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நான்காம் கட்ட பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தலும் நடைபெற்றது. இதன் காரணமாக நான்காம் கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் உயிர் தப்பியமை குறித்து நிம்மதி...

2024-07-14 13:32:40
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்...

2024-07-14 12:33:50
news-image

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் ஒரு கொலை...

2024-07-14 10:57:38
news-image

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்மீது துப்பாக்கி...

2024-07-14 07:31:23
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் :...

2024-07-14 06:57:37
news-image

அங்­கோலா முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுக்கு ஊழல்...

2024-07-14 09:55:12
news-image

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில்...

2024-07-13 17:16:55
news-image

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்...

2024-07-13 16:55:46
news-image

இந்தியாவில்13 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு...

2024-07-13 12:39:59
news-image

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின்...

2024-07-13 10:54:13
news-image

மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3...

2024-07-13 10:12:04
news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27