உப்பு  நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு

Published By: Vishnu

14 May, 2024 | 02:18 AM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (13) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி  அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.

குறித்த ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு முன்பாக கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றமை வழமையாகும்.

அதற்கமைய இம்முறையும், கடல் தீர்த்தம் (உவர் நீர்) எடுத்து வரப்பட்டு, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பானையில் இடப்பட்டு அதன்பின்னர் உப்பு நீர் விளக்கு எரியவிடப்படும்.

குறித்த விளக்கு தொடர்ந்து எரியவிடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை (20) அதிகாலை, இந்த உவர் நீர் விளக்கானது மடைப் பண்டங்களுடன் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னரே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51