பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமை (13) கொழும்பு லிபர்டி சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார செயலை கண்டிக்கின்றேன். இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன்.
இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.
இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பாலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன். பெயர் குறிப்பிட்டு கூறுவது இதுவே முதற் தடவை.
சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடமளித்தே இதற்கு முன்னர் பெயர் கூறாது பேசினேன்.இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலயே பேசினேன். ஆனால் நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வண்மையாக கண்டிக்கிறோம்.
பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. அந்நாட்டுக்காக இலங்கையர்களாகிய நாமனைவரும் சாதி,இன,மத,குலம், கட்சி அல்லது வேறேதேனும் பேதங்கள் இருப்பின் சகல பேதங்களையும் கடந்து பலஸ்தீன மக்களின் சகல உரிமைகளுக்காகவும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM