இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Published By: Vishnu

13 May, 2024 | 10:54 PM
image

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

வனிது ஹசரங்க தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை (14) காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

வீரர்களை ஊக்குவித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, நாட்டிற்கு சிறந்த வெற்றியுடன் வருமாறு அவர்களை வாழ்த்தினார்.

இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற முதலாவது பிரிவு ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணியும் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது.

பல வருடங்களின் பின்னர் ரக்பி விளையாட்டில் கிடைத்துள்ள இந்த வெற்றியையிட்டு நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, வீரர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02