(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தொழில் நிமித்தம் ரஷ்யாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து அங்குச் சென்றுள்ள எமது ஓய்வு பெற்ற இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் முன்னணி வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
அதனால் வெளிவிவகார அமைச்சரை உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பி இது தொடர்பில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13)விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ரஷ்யாவுக்குத் தொழிலுக்கு அனுப்புவதாக ஓய்வு பெற்ற எமது பாதுகாப்பு அதிகாரிகளிடம் 10இலட்சம் ரூபா வரை பணம் பெற்றுக்கொண்டு, அவர்களை ரஷ்யா உக்ரைன் யுத்தத்தில் ஈடுபடுத்தி வருவதாகக் கடந்த சில தினங்களாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சினை இன்று பாரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
ரஷ்யாவுக்கு சென்றுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள், அங்கு யுத்தம் செய்யச் செல்லவில்லை. தொழிலுக்கே சென்றுள்ளார்கள்.
ஆனால் அங்குச் சென்ற பின்னர் அவர்கள் ரஷ்யா, உக்ரைன் யுத்தத்தில் முன்னணி பாதுகாப்பு வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இவ்வாறு சென்ற பலர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இவ்வாறு பணம் பெற்று இவர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியவர்கள் யார் என இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க அரசாங்கமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதனால் இந்த பிரச்சினைகளை தற்போது பாரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண அரசாங்கம் வெளிவிவகார அமைச்சரை அல்லது இராஜாங்க அமைச்சரை ரஷ்யாவுக்கு அனுப்பி, அங்குள்ள எமது இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM