வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கான எளிய பரிகாரங்கள்..?

Published By: Digital Desk 7

13 May, 2024 | 05:22 PM
image

எம்முடைய மக்களின் பாரிய கனவு என்பது 600 சதுர அடியோ அல்லது 1200 சதுர அடியோ  சிறிதளவு சொந்தமாக காணி வாங்கி, அதில் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தி குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக ஆயுள் முழுதும் வாழ்க்கையை நடத்த வேண்டும்  என்பதாகவே இருக்கும்.

இதற்காக திட்டமிட்டு காணி வாங்கி, அதன் மீது வங்கியில் கடன் வாங்கி, பொறியாளர் மற்றும் கட்டுமான நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப உதவியை பெற்று, அவர்களின் வழிகாட்டலின் படி ஒப்பந்தத்தை மேற்கொண்டு வீடு கட்டும் பணியை தொடங்குவோம்.

வாஸ்து படி கட்டிட வரைபடத்தை ரசித்து உருவாக்கி அதன்படி கட்டுமானத்தை கட்டுவதற்காக அரசாங்கத்திடம் முறையாக அனுமதியும் பெற்று அதிகாரிகளின் அனுசரணையுடன் வங்கிகளிடமிருந்து கடனும் பெற்று வீடு கட்ட தொடங்கி இருப்போம். ஆனால் எதிர்பாராத காரணங்களால் அந்தப் பணி தடைப்பட்டு  தாமதமாகி கொண்டே இருக்கும்.

ஒரு புறம் கட்டுமான பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம், மறுபுறம் வங்கிகளிலிருந்து கடன் தொகை பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல் மறுபுறம் களத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பற்றாக்குறை என பல தரப்புகளிலிருந்து அழுத்தங்களும் நெருக்கடிகளும் உண்டாகும். 

இவை அனைத்தையும் ஓரளவு சீர் செய்து பணியை துவக்கி, வீட்டை கட்டி எழுப்பி விடலாம் என நினைக்கும்போது பருவநிலை குறுக்கிட்டு விவரிக்க இயலாத தடையை ஏற்படுத்திவிடும். இதனால் மனதளவில் பாதிக்கப்படும்  குடும்பத் தலைவர் சோர்வடைந்து விரக்தி எல்லைக்கு செல்லக்கூடும்.

இந்தத் தருணத்தில் இதிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையை பெறுவதற்காக யார் என்ன சொன்னாலும் செய்வதற்கு அந்த குடும்பத் தலைவர் தயாராகவே இருப்பார். இதுபோன்ற சிக்கலான தருணத்தில் எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் எளிய பரிகாரத்தை மேற்கொண்டால் விரைவில் தடைகள் அகன்று பலன்கள் கிடைக்கும் என முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களுடைய கட்டுமானத்தில் இருக்கும் வீட்டின் வடகிழக்கு திசையில் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளை என குறிப்பிடப்படும் நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் பதினொரு மெழுகுவர்த்தியினை ஏற்றி, 'தடை அகல வேண்டும். வீடு சிறப்பாக கட்டி முடிக்கப்பட வேண்டும்' என ஒருமுக மனதுடன் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து பதினோரு நாட்கள் செய்து வந்தால்  அதன் பிறகு வரும் சில நாட்களிலேயே தடைகள் அனைத்தும் அகன்றுவிடும் . அவை வங்கி கடன் பெறுவதில் இருந்த தடையாக இருந்தாலும் சரி அல்லது தொழிலாளர்களின் பற்றாக்குறை நிலையாக இருந்தாலும் சரி அல்லது கட்டுமான பொருட்களின் அளவு மற்றும் அனுமதியாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் சீராகி, உங்களுடைய வீடு உங்களுடைய கனவு திட்டத்தின் படி கட்டி முடிக்கப்படும். அதன் பிறகு புதிதாக கட்டி நிறைவு செய்யப்பட்ட வீட்டில் புதுமனை புகுவிழாவை நடத்தி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தலாம்.

இந்த எளிய பரிகாரத்தை மேற்கொண்டு பலன்களை அடைந்து வீட்டுப் பணிகளை நிறைவு செய்து புதுமனை புகுவிழா நடத்திய பெரும்பாலான மக்களின் அனுபவ பரிகாரம் என்பதால் இதனை நீங்களும் கடைப்பிடிக்கும் போது உங்களுக்கான சுப பலன்கள் கிடைப்பதை நீங்களும் அனுபவத்தில் உணரலாம்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33